வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்.. பாஜக கோரிக்கை
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது தர வேண்டும் என்று பாஜக மீண்டும் கோரிக்கை வைத்துள்ளது.
சச்சினுக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பலருக்கும் அந்த விருதை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அந்த வகையில் பாஜக, வாஜ்பாய்க்கு விருது அளிக்க வேண்டும் என்று தனது முந்தைய கோரிக்கையை புதுப்பித்துள்ளது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ஏன் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது தருவதில் மத்திய அரசு இன்னும் தயக்கம் காட்டுகிறது. சச்சினை நான் மதிக்கிறேன். அதேசமயம், ஏன் வாஜ்பாய்க்கு இந்த அரசு பாரதரத்னா விருது தராமல் இருந்து வருகிறது என்பதையும் அறிய விரும்புகிறேன்.
சர்தார் வல்லபாய் படேல் தேசிய ஹீரோ. ஆனால் அவருக்கு 41 ஆண்டுகள் கழித்துத்தான் பாரதரத்னா விருதை இந்த நாடு கொடுத்தது. மெளலானா அபுல் கலாம் ஆசாத்துக்கும் தாமதமாகத்தான் கொடுத்தார்கள் என்றார் பிரசாத்.
பாஜக மூத்த தலைவரான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், வரும் குடியரசு தினத்தன்று வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருதினை வழங்க பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாஜ்பாய் போன்றோரை கெளரவிக்க நாடு தவறி விடக் கூடாது என்றார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications