டிக்கெட் எடுத்துவிட்டு கட்டணத்தை ஈ.எம்.ஐ.யில் செலுத்தலாம்... ஸ்பைஸ் ஜெட் புதிய ஆஃபர்
டெல்லி: விமான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் புதிய வசதியை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது.
ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமானது இந்திய உள்நாட்டு விமான சேவைகளை மிக குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதத்தில் எளிதான தவணை முறை கட்டண டிக்கெட் வசதியை ஸ்பைஸ் ஜெட் அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு, "புக் நௌ, பே லேட்டர்" என பெயரிடப் பட்டுள்ளது.

இதன் மூலம் டிக்கெட் பெறும் வாடிக்கையாளர்கள் 3 முதல் 12 மாத தவணையில் தங்கள் பணத்தை திருப்பி செலுத்தலாம். வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் மாத அளவைப் பொறுத்து, அதற்கான வட்டி வீதம் 12 முதல் 14 சதவீதம் வரை இருக்கும் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதியை ஆக்சிஸ் வங்கி, எச்.எஸ்.பி.சி, கொட்டக் வங்கி மற்றும் ஸ்டாண்டட் ஷாட்டட் வங்கிகளின் கிரெடிட் கார்ட் வைத்திருக்கும் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு பயணிகளிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications