தலித் குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழிலேயே ‘ஜாதி’... விரைவில் நடைமுறை?
டெல்லி: தலித் குழந்தைகளுக்கு இனி பிறப்புச் சான்றிதழில் சாதியைக் குறிப்பிடும் நடைமுறை விரைவில் வரவுள்ளதாம்.
அதாவது பிறப்புச் சான்றிதழிலேயே அவர்களின் சாதியையும் இணைத்துக் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுமாம். இதன் மூலம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவதில் தற்போது உள்ள பல்வேறு சிரமங்கள் தவிர்க்கப்படும் என மத்திய அரசு கருதுகிறது.
இதுதொடர்பான பல்வேறு வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. விரைவில் இது அமலுக்கு வருமாம்.

கோரிக்கை...
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்பு மாணவ, மாணவியர் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும், சமர்ப்பிப்பதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் இதை சரி செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சிக்கல்கள்...
படிக்கும்போதும், வேலைக்காக விண்ணப்பிக்கும்போதும் தலித் மாணவர்கள் சாதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகிறது. பலருக்கு சாதி்ச் சான்றிதவே கிடைக்காத நிலையுமா் காணப்படுகிறது.

சலுகைகள்...
இந்த சான்றிதழ் இருந்தால்தான் தங்களு்கான சலுகைகளை அவர்களால் அனுபவிக்க முடியும் என்பதால் தலித் வகுப்பினர் இந்த சான்றிதழுக்காக பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலையும் ஏற்படுகிறது.

பிறப்புச் சான்றிதழிலேயே...
இதைச் சரி செய்யவே தற்போது பிறப்புச் சாழ்றிதழிலேயே தாழ்த்ப்பட்ட மற்றும் ழங்குடியின மக்களுக்கு அவர்களின் சாதியைக் குறிப்பிட்டு தர உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதன் மூலம் அவர்கள் சாதிச் சான்றிதழைப் பெறுவதில் இருந்து வரும் பெரும் குழப்பமும், தடங்கல்களும, தாமதங்களும் நீங்க வழி ஏற்பட்டுள்ளது.

பள்ளிகள் மூலமாக...
அதேபோல எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே தலித் வகுப்பு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழையும், வசிப்பிட சான்றிதழையும் பள்ளிகள் மூலமாகவே வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியர்களின் பணி...
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே இதைச் செய்ய வேண்டும். எட்டாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழை தலைமை ஆசிரியர்கள் பெற்று விநியோகிப்பார்கள்.

உத்தரவு...
இந்த வேலைகளை செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் செய்யலாம் என்றும் தலைமை ஆசிரிர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து தலித் வகுப்பு மாணவர்களிடமும் உரிய பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று அவர்களுக்கான சாதி மற்றும் வசிப்பிடச் சான்றிதழ்களுக்கான விண்ணப்பத்துடன் தலைமை ஆசிரியர்கள் அனுப்பி அவற்றைப் பெற்று மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவகாசம்...
தலைமை ஆசிரியர்கள் தரும் ஆவணங்கைப் பரிசீலித்து சான்றிதழை விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு 30 முதல் 60 நாள் வரை அவகாசம் தரப்படும். அதற்குள் சான்றிதழ் விநியோகிக்கப்பட வேண்டும். ஒருவேளை சான்றிதழ் தர மறுத்து நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு மேல் முறையீடு செய்ய அவகாசம் தரப்படும்.

டிசம்பருக்குள்...
இந்த வரைவுத் தீரமானம் தொடர்பாக டிசம்பருக்குள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications