யுவர் ஆனர், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பார்தியின் நாயிடம் விசாரிக்க வேண்டும்: போலீஸ்
டெல்லி: முன்னாள் டெல்லி சட்டத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பார்தியின் நாயை தங்கள் காவலில் எடுக்க போலீசார் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளனர்.
முன்னாள் டெல்லி சட்டத் துறை அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுமான சோம்நாத் பார்தி மீது அவரது மனைவி லிபிகா மித்ரா வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். சோம்நாத் தன்னை அடித்து துன்புறுத்தியதுடன், நாயை விட்டு கடிக்க வைத்ததாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே சோம்நாத் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கார்க் திங்கட்கிழமை தள்ளுபடி செய்தார். லிபிகா கடந்த 2013ம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது சோம்நாத் கூறியதால் கடித்த அவர்களின் வீட்டு நாய் டானை தங்கள் காவலில் எடுக்க போலீசார் நீதிபதியிடம் அனுமதி கோரினர்.
இது குறித்து சோம்நாத்தின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் கூறுகையில்,
போலீசார் நாயிடம் எப்படி விசாரணை நடத்தி வாக்குமூலம் வாங்குவார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றார்.
நாயை காவலலில் எடுப்பது குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். நாய் டான் தற்போது சோம்நாத் வீட்டில் தான் உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications