For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா மீது எந்த நொடியிலும் அணு குண்டு வீசுவோம்.. வட கொரியா பகிரங்க மிரட்டல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா மீது எந்த நொடியிலும் அணு குண்டு வீசுவோம்.. வட கொரியா பகிரங்க மிரட்டல்

    டெல்லி: அமெரிக்காவுடன் அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று, ஐநா சபைக்கான வட கொரியாவின் துணை தூதர் கிம் இன் ரியோங் கூறியுள்ள கருத்து பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

    வட கொரியா மற்றும் அமெரிக்கா நடுவே தொடர்ந்து பனிப்போர் நிலவி வருகிறது. தங்களது பிராந்தியத்தில் அமெரிக்கா ஊடுருவ முயலுவதாக வட கொரியா தொடர்ந்து க்றம்சாட்டி வருகிறது.

    இதனிடையே அவ்வப்போது வட கொரியா, அணு ஆயுத சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் வெற்றிகரமாக செய்துவருவது உலக நாடுகள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

    எங்கள் உரிமை

    எங்கள் உரிமை

    இந்த நிலையில், கிம் இன் ரியோங் கூறுகையில், வட கொரியாவை கடந்த 1970ம் ஆண்டு முதலே அமெரிக்கா குறி வைத்து சீண்டி வருகிறது. உலகிலேயே வட கொரியா மட்டுமே அப்போது முதல் இப்போது வரை அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதல் அச்சத்திலேயே உள்ளது. இதனால் வட கொரியா தனது பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை வைத்துக்கொள்வது உரிமை. தவறு கிடையாது.

    பயிற்சி எடுத்துள்ளோம்

    பயிற்சி எடுத்துள்ளோம்

    ஒவ்வொரு ஆண்டும் அணு ஆயுத சொத்துக்களை பயன்படுத்தி பெரிய அளவில் ராணுவ பயிற்சிகளை எடுத்து வருகிறோம். எங்களது ஆதிக்கத்தை தடுக்க அமெரிக்கா ரகசிய திட்டங்களை வைத்துள்ளதை அறிவோம்.

    ரெடியாக உள்ளன

    ரெடியாக உள்ளன

    இவ்வாண்டு நாங்கள் ஸ்டேட் அணு சக்தியை நிறைவு செய்துள்ளதோம். இப்போது, வட கொரியா முழு அளவிலான அணு ஆயுத நாடாக உள்ளது. அணு குண்டுகள், ஹைட்ரோஜன் குண்டுகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன.

    அமெரிக்காவே எங்கள் இலக்கிற்குள்

    அமெரிக்காவே எங்கள் இலக்கிற்குள்

    மொத்த அமெரிக்காவும் எங்கள் தாக்குதல் இலக்கிற்குள்தான் உள்ளது. அமெரிக்கா எங்களின் புனிதமான எல்லைக்குள் ஒரு இஞ்ச் எடுத்து வைத்தாலும், எங்களின் கடுமையான தண்டனையில் இருந்து தப்ப முடியாது. அணு ஆயுத போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ரஷ்யாவின் பொருளாதார தடை

    ரஷ்யாவின் பொருளாதார தடை

    வட கொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், ரஷ்யாவும் அந்த தடையை வழி மொழிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பலவும் புதிதாக சில தடைகளை வட கொரியா மீது விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    North Korea’s deputy UN ambassador warned that the situation on the Korean peninsula has reached the touch-and-go point and a nuclear war may break out any moment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X