அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது?
நியூயார்க்: அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லாரிகளை ஓட்டி வந்த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு தாய் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை (US Customs and Border Protection) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் 'ஆபரேஷன் செக்மேட்' என்ற சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மொத்தம் 52 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 36 பேர் லாரிகளை (semi-trucks) ஓட்டி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த 36 லாரி ஓட்டுநர்களில் 30 பேர் இந்தியர்கள். மீதமுள்ள ஆறு பேர் மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கலிபோர்னியா, நியூயார்க், வாஷிங்டன் மற்றும் விர்ஜீனியா உள்ளிட்ட மாநிலங்களில் வணிக ஓட்டுநர் உரிமம் (Commercial Driver's License) பெற்றிருந்தனர். சிலரிடம் எந்த ஓட்டுநர் உரிமமும் இல்லை.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேலை அனுமதி ஆவணங்களை (Employment Authorization Documents) வைத்திருந்தனர். ஆனால் அந்த ஆவணங்கள் முந்தைய நிர்வாக காலத்தில் வழங்கப்பட்டவை என்றும் தற்போது அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்யும் தகுதியை இழந்த நிலையில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பைடன் கால ஆவணங்கள் செல்லாது
இந்த இந்தியர்களில் பெரும்பாலானோர் ஜோ பைடன் ஆட்சியின் போது பெற்ற வேலை அனுமதி ஆவணங்களை (Employment Authorization Documents) வைத்திருந்தனர். ஆனால் இந்த ஆவணங்கள் தற்போது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கூட்டாட்சி சட்டப்படி அனைவரும் விசாரணைக்குப் பின் நாடு கடத்தப்பட உள்ளனர்.
பொது பாதுகாப்புக்கு முக்கியத்துவம்
அமெரிக்காவில் தினசரி பொருட்கள் விநியோகம், தொழிற்சாலை சரக்குகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பெரும்பாலும் கனரக டிரக் சேவைகளையே சார்ந்துள்ளது. இத்தகைய முக்கிய துறையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிபவர்கள் இருப்பது பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அமெரிக்க அரசு கருதுகிறது.
இதன் காரணமாகவே "ஆபரேஷன் செக்மேட்" நடவடிக்கை தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சட்டவிரோத குடியேற்ற விதிமுறைகளை மீறி வணிக வாகனங்களை இயக்குபவர்களை கண்டறிந்து கைது செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
நாடு கடத்தப்பட உள்ள இந்தியர்கள்
கைது செய்யப்பட்ட அனைத்து நபர்களும் அமெரிக்க கூட்டாட்சி சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன்பின் அவர்களை சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் குடியேற்றக் கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையடைந்து வரும் சூழலில், சட்டபூர்வ ஆவணங்களின் செல்லுபடியாகும் நிலையை தொடர்ந்து பராமரிப்பது வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications