Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்!
மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், குவைத் நாட்டின் மீது ஈரான் திடீரென பாலிஸ்டிக் ஏவுகணைகள் (Ballistic Missile) மற்றும் வெடிகுண்டுகள் ஏந்திய ட்ரோன்களைக் கொண்டு வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓமிடியே (Omidiyeh) என்ற ராணுவத் தளத்திலிருந்து இந்த ஏவுகணைகள் குவைத்தை நோக்கி ஏவப்பட்டதாகக் குவைத் ராணுவம் அதிகாரப்பூர்வமாகத் உறுதிப்படுத்தியுள்ளது.

வளைகுடா பகுதியில் அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இடையே இந்த அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் மீண்டும் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் முடங்கியுள்ளது.
ஈரானின் இந்தத் திடீர் வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, குவைத் நாட்டின் பொதுப் பாதுகாப்புப் படைத் தலைமையகம் (General Staff of the Kuwaiti Army) உடனடியாகச் செயல்பட்டுத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defences) கொண்டு ஏவுகணை மற்றும் டிரோன் மீது எதிர் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த எதிர் தாக்குதல் முயற்சியில் நாட்டின் எல்லையைக் கடந்து உள்ளே நுழைய முயன்ற ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, நடுவானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக குவைத் ராணுவம் அறிவித்துள்ளது.
ஏன் குவைத்?
சமீப காலமாக ஈரானின் தாக்குதல் அனைத்தும் குவைத்-ஐ டார்கெட் செய்யப்பட்டே நடந்து வருவதை கவனித்து இருக்கலாம். இதற்கு முக்கியமான காரணம் குவைத் நாட்டில் இருக்கும் அமெரிக்காவின் ராணுவ தளம் தான். இந்த 3 மாத போரில் ஈரான் சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல் அனைத்தும் அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து மட்டுமே நடத்தப்பட்டு உள்ளது. இதன் வரிசையில் தற்போது குவைத் முக்கிய டார்கெட் ஆக மாறியுள்ளது.
குவைத் ராணுவத்தின் எச்சரிக்கை
குவைத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதால், இந்தியாவில் அங்கு வேலைக்காகச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து குவைத் ராணுவம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பில், "பொதுமக்கள் யாரும் தேவையற்ற வதந்திகளை நம்பியோ, வெடிச்சத்தங்களைக் கேட்டோ பீதியடைய வேண்டாம். குவைத் நகரின் வான்வெளியில் கேட்கும் வெடிச்சத்தங்கள் அனைத்தும், எதிரிகளின் ஏவுகணைகளைத் தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக எதிர்த்து தாக்கப்பட்டதால் ஏற்படும் சத்தம் மட்டுமே" என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச முதலீட்டு சந்தை
வளைகுடா பகுதியில் மீண்டும் தாக்குதல் துவங்கியிருக்கும் காரணத்தால் பங்குசந்தை, நாணய சந்தை, கச்சா எண்ணெய் சந்தை அனைத்தும் மீண்டும் பாதிப்படைய துவங்கியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை 2 சதவீதத்திற்கு மேல் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications