தனது கல்லூரியில் படித்த 11 மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர்.. தெலுங்கானா எம்பி மகன் மீது புகார்!
தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி சீனிவாசின் மகன் 11 மாணவிகளை பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிஸாமாபாத்: தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி சீனிவாசின் மகன் 11 மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்பி சீனிவாசின் மகன் சஞ்சய். இவர் சாங்கரி என்ற பெயரில் நர்சிங் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் மருத்துவகல்லூரியைச் சேர்ந்த 11 மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் சஞ்சய் பாலியல் தொல்லை கொடுத்தாக அங்குள்ள பெண்கள் மேம்பாட்டு ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்..

போலீஸில் புகார்
இதைத்தொடர்ந்து பெண்கள் மேம்பாட்டு ஆணையம் அம்மாநில உள்துறை அமைச்சரை அணுகியது. மேலும் தெற்கு நிஸாமாபாத் உதவி போலீஸ் கமிஷனரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர்.

பலாத்காரம் செய்ய முயற்சி
சஞ்சய் அடிக்கடி தங்களிடம் செக்ஸியஸ்ட்டாகவும் ஆபாசமாகவும் பேசுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த வாரம் விபத்தில் சிக்கிய ஒரு மாணவியை வீட்டிற்கு அனுப்பாமல் தனது அறைக்கு அழைத்து சென்ற சஞ்சய் அவரை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளனர்.

இரவில் தொந்தரவு
மேலும் மாணவிகளை இரவில் தன்னுடன் தங்குமாறும் சஞ்சய் தொந்தரவு செய்துள்ளார். இரவு நீண்ட நேரத்திற்கு பின்பே அவர்களை ஹாஸ்டலுக்கு அனுப்பியுள்ளார். மேலும் அடிக்கடி ஹாஸ்டலுக்கு வந்து மாணவிகளை தன்னை சந்திக்குமாறு வற்புறுத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பெற்றோரிடம் கதறல்
விடுதிக்கு திரும்பிய மாணவிகள் தங்களை காப்பாற்றிக்கொள்ள படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு கிராமத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். பின்னர் நடந்தவற்றை மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

எம்பி மகன் மீது வழக்கு
இதன் அடிப்படையிலேயே சஞ்சய் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் (IPC) 354, 506, 509 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் கீழ் சஞ்சய் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications