ஒடிஷா சட்டசபையில் இந்திக்கு தடை- சிவசேனா பாய்ச்சல்!!
மும்பை: ஒடிஷா மாநிலத்தில் இந்தியில் பேசுவதற்கு அம்மாநில சபாநாயகர் தடை விதித்துள்ளார். இதற்கு சிவசேனா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஒடிஷா மாநில சட்டசபையில் கடந்த வாரம் விவாதம் ஒன்று நடைபெற்று வந்தது. அப்போது உறுப்பினர் ஒருவர் இந்தியில் பேசினார். இதனால் கடுப்பாகிப் போன ஒடிஷா சபாநாயகர், இந்த மாநில சட்டசபையில் மாநில மொழியான ஒடியாவிலோ அல்லது ஆங்கிலத்திலோதான் பேச வேண்டும். இந்தில் பேசுவதை ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

தற்போது இந்த விவகாரத்தை சிவசேனா கையில் எடுத்துள்ளது. இது குறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஊடகமான சாம்னாவில் எழுதப்பட்டுள்ளதாவது:
பிரதமர் மோடி இந்தியில்தான் பேசுகிறார். பூடான் நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி இந்தியில்தான் உரையாற்றினார். இப்படி பிரதமர் மோடி இந்திக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒடிஷா மாநில சட்டசபையில் இந்தியில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இந்தியில் கேள்வி கேட்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது. ஆங்கிலம் உலக மொழிதான் என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தேசிய மொழியான இந்திக்கு அடுத்ததாக 2வது அந்ததஸ்தை கொடுக்க வேண்டும் என்று நியாயப்படுத்துவதா?
இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
இதனிடையே ஒடிஷா சட்டசபையில் எம்.எல்.ஏ. ஒருவருக்கு இந்தியில் இன்று பேச அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications