For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தியை கொன்ற கோட்சேவை பிடித்து கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் நிதி: ஒடிசா அரசு அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

புவனேஸ்வர்: தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை பிடித்துக் கொடுத்த ரகுநாயக்கின் மனைவிக்கு ஒடிசா மாநில அரசு ரூ.5 லட்த்தை நிதி உதவியாக வழங்கியுள்ளது.

தேச தந்தை மகாத்மா காந்தி தலைமையில் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. நாம் சுதந்திரம் அடைந்த சில மாதங்களிலேயே, அதாவது 1948-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30-ஆம் தேதி அவரை நாதுராம் கோட்சே என்பவர் சுட்டுக்கொன்றார்.

 Odisha govt gives Rs 5 lakh Raghu Nayak family

காந்தியடிகள் கொல்லப்பட்ட போது, அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தைரியமாக ரகுநாயக் என்பவர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இதையடுத்து, அவரை பாராட்டும் விதமாக ரகு நாயக்கிற்கு அவரது வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.500 வழங்க அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் உத்தரவிட்டார்.

அதன்படி அவர் உயிருடன் இருக்கும் வரை அந்த உதவித்தொகை பெற்று வந்தார். கடந்த 1983 ஆம் ஆண்டு ரகுநாயக் உயிரிழந்தார். இதன் பின்னர் சில வருடங்களில் அவரது மகனும் இறந்துவிட்டார்.

ரகுநாயக் இறந்து 33 வருடமாக அவரது மனைவி மண்டோதரி நாயக் தனது மகளுடன் வசித்து வருகிறார். தோட்ட வேலை பார்த்து வரும் மண்டோதரி வறுமை காரணமாக மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இதனையறிந்த ஒடிசா மாநில அரசு ரகு நாயக்கின் மனைவி மண்டோதரி நாயக்கை தலைமைச் செயலகத்துக்கு வரவழைத்து அவருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை மண்டோதரி நாயக்கிடம் முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார். அவருக்கு சால்வை போர்த்தியும் கெளவுரவப்படுத்தினார்.

English summary
Odisha govt gives Rs 5 lakh to the widow of the man who caught Nathuram Godse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X