லாக்டவுன்.. குழந்தைகள் அர்த்தமுள்ள வகையில் பொழுது போக்க வேண்டும்.. ஓடிசா அரசு அசத்தல் ஏற்பாடு
புவனேஸ்வர்: ஒடிசா அரசும், யுனிசெஃப்பும் இணைந்து, லாக்டவுன் காலகட்டத்தில், 16 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை அர்த்தமுள்ள வழியில் பயணிக்கச் செய்ய செயல்பாடுகளின் பட்டியலை உருவாக்கியுள்ளது.
கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து 3 முதல் 6 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 72,587 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குழந்தைகளை நல்ல பணிகளில் ஈடுபடுத்தி ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது, யுனிசெஃப் உடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு (WCD) மற்றும் மிஷன் சக்தி (எம்.எஸ்) துறை, எனவே, காலண்டர் அடிப்படையிலான 'கரே கரே அருனிமா' ('Ghare Ghare Arunima') என்ற செயல் திட்டம் வெளியிட்டுள்ளது. இதில், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளின் உதவியோடு, குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க தேவையான செயல்பாடுகள் உள்ளன.
இது ஆரம்பகால கற்றலை கற்பிக்கவும், வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு பள்ளி செல்லும் நிலையை மனதளவில் தயார்படுத்தவும் உதவும் என்று அந்த அதிகாரி கூறினார். WCD & MS செயலாளர் அன்பு கார்க் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், குடும்பங்கள் இளம் குழந்தைகளை வீட்டில் அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுத்துவது முக்கியம் என்று கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அவர்களைத் தூண்டுவதோடு அவர்களின் உளவியல் சமூக நலனை மேம்படுத்தும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
பாடல்கள், நடனம், ஓவியம் மற்றும் கதை சொல்லல் போன்ற செயல்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்காக பெற்றோரையும் இணைத்துக் கொள்ள இந்த திட்டம் வலியுறுத்துகிறது.
கைகளை கழுவுதல், சுகாதாரம், மற்றும் தொற்றுநோயைத் தடுக்க சமூக விலகல் போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் குறித்தும் இது கவனம் செலுத்துகிறது. மேலும், குழந்தைகளுக்கு வீட்டு வேலைகளான ஆடைகளை மடிப்பது, தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வது போன்றவையும் கற்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications