இந்தியாவிலேயே இங்குமட்டும்தான் டீசல் விலை பெட்ரோலை விட அதிகம்.. ஏன் தெரியுமா?
இந்தியாவிலேயே ஒடிசாவில் மட்டும்தான் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.
புவனேஷ்வர்: இந்தியாவிலேயே ஒடிசாவில் மட்டும்தான் டீசல் விலை பெட்ரோல் விலையை விட அதிகமாக உள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் டீசல் விலை திடீர் என்று குறைக்கப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம் காரணமாக இந்த விலைகுறைப்பு நிகழ்ந்து உள்ளது.
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.84.64 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 29 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.79.22 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஒடிசாவில் பெட்ரோல் விலை டீசல் விலையை விட குறைவாக உள்ளது.

என்ன வழக்கம்
பொதுவாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் டீசல் விலை எப்போதும் பெட்ரோல் விலையை விட குறைவாகத்தான் இருக்கும். பெட்ரோலின் அடிப்படை விலை, அதன் மீதான வரி என்று நிறைய காரணங்கள் காரணமாக பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும்.
[இனி இப்படித்தான்.. சென்னை உள்ளிட்ட நகரங்களில் 5வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்தது ]

உயர்ந்தது
ஆனால் கடந்த மாதம் ஒரேயடியாக டீசலின் அடிப்படை விலையில் ரூபாய் ஐந்து இந்தியா முழுக்க உயர்த்தப்பட்டது. இதனால் டீசல் விலை பெட்ரோல் விலையை நெருங்கியது. ஆனாலும் பெட்ரோல் விலையைவிட குறைவாகவே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் மாநில அரசுகள் விதிக்கும் வரி. மாநில அரசுக்கு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியில் பெட்ரோலுக்கு அதிக வரியும் டீசலுக்கு குறைவான வரியும் வசூலிக்கப்படுகிறது.

எவ்வளவு விலை
ஆனால் தற்போது ஒடிசாவில் டீசல் விலை பெட்ரோல் விலையைவிட அதிகமாக உள்ளது. ஆம் அங்கு டீசல் விலை 80 ரூபாய் 40 காசுகளுக்கு விற்கிறது. பெட்ரோல் விலை 80 ரூபாய் 27 காசுகளுக்கு விற்கிறது. இந்தியாவிலேயே இங்கு மட்டும்தான் பெட்ரோல் விலையைவிட டீசல் விலை அதிகமாக விற்கிறது.

என்ன காரணம்
இதற்கு காரணமும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் மாநில அரசுக்கு விதிக்கும் மதிப்புக்கூட்டு வரியில் இங்கு பாகுபாடு காட்டப்படுவதில்லை. பெட்ரோல், டீசல் இரண்டிற்கும் ஒரே மாநில வரிதான் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே இங்கு டீசல் அதிக விலை விற்கிறது. இந்தியாவில் ஒடிசாவில் மட்டுமே இப்படி டீசல் அதிக விலைக்கு விற்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications