இனி மருந்து சீட்டில் கோழிக்கிறுக்கல்கள் இருக்காது.. டாக்டர்களின் கையெழுத்துக்கு குட்டு வைத்த நீதிபதி
புவனேஸ்வரம்: அனைத்து மருந்து சீட்டுகள், மருத்துவ அறிக்கைகளை தெளிவான கையெழுத்தில் வழங்க வேண்டும் என ஒடிஸா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பொதுவாக மருத்துவர்களின் கையெழுத்து அழகாகத்தான் இருக்கும். ஆனால் அவர்கள் மருந்துச் சீட்டுகளில் மட்டும் கிறுக்குவது போல் எழுதுவார்கள். அந்த மருத்துவரின் கையெழுத்து பழகிய மருந்தாளுநர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஆனால் சில கையெழுத்துகளை வேறு மருந்தாளுநர்கள் கண்டுபிடிக்க சில சிரமங்கள் உள்ளன. புதிய மருந்தாளுநர்கள் கையெழுத்து புரியாமல் மருந்துகளை மாற்றி கொடுத்துவிட்டால் பெரும் பிரச்சினை ஏற்படும்.
சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சொல்லும் மருந்துகளை அவர்களுடைய உதவியாளர்கள் குறித்துக் கொண்டு அதை பிரிண்ட் எடுத்து நோயாளிகளிடம் கொடுக்கிறார்கள். சிறிய கிளீனிக்குகளில் கூட இந்த முறை வந்துவிட்டது. இந்த நிலையில் ஒடிஸா ஹைகோர்ட்டில் ஒரு வினோதமான வழக்கு வந்துள்ளது.
மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டதால் ஒடிஸா உயர்நீதிமன்றத்தில் ஒருவர் கருணைத் தொகை கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு விசாரணையின் போது அரசு சார்பில் இணைக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவாகவும் புரிந்து கொள்ளும்படியாகவும் இல்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே. பனிகிரஹி அந்த மருத்துவரை ஆஜராக உத்தரவிட்டார்.
அதன்படி டாக்டரும் காணொலி காட்சியில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதையடுத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் மருந்து சீட்டை கையால் எழுதுவதால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. உடல் பிரேத பரிசோதனை அறிக்கை கூட கையால் எழுதுவதால் நீதிமன்றத்தில் சரியான முறையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மருந்து சீட்டு, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை கையால் எழுதுவதை தவிர்த்து விடுங்கள். முடிந்தால் பெரிய எழுத்துகளில் (Capital Letters) அல்லது கம்ப்யூட்டரில் டைப் செய்து தர வேண்டும் என ஒடிஸா அரசு சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications