பூரி ஜெகந்நாதர் கோவிலில் இருந்து ஆட்டத்தை தொடங்கிய ஒடிஷா பாஜக அரசு! அடுத்து "கருவூல" சாவிக்கு குறி?
புவனேஸ்வர்: ஒடிஷாவில் புதியதாக ஆட்சி அமைத்த பாஜக, பூரி ஜெகந்நாதர் கோவிலில் இருந்து அதிரடியைத் தொடங்கி உள்ளது. பூரி ஜெகந்நாதர் கோவிலில் 4 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டதுடன் ஏன் இந்த கதவுகள் பூட்டப்பட்டன என விசாரணை அறிக்கையையும் கேட்டுள்ளது புதிய பாஜக அரசு.
ஒடிஷாவில் 25 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு முதல்வராக இருந்தவர் நவீன் பட்நாயக். 25 ஆண்டுகளாக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் அரசை சட்டசபை தேர்தலில் பாஜக அகற்றி புதிய ஆட்சியை அமைத்துவிட்டது.

ஒடிஷா முதல்வர் பதவியேற்பு: ஒடிஷாவின் முதல்வராக மோகன் மாஜி நேற்று பதவியேற்றார். அவருடன் துணை முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஜெகந்நாதர் கோவில் கதவுகள் திறப்பு: இதனைத் தொடர்ந்து ஒடிஷா பாஜக அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில், பூரி ஜெகந்நாதர் கோவிலில் கொரோனா காலத்தில் இருந்தே மூடப்பட்டிருக்கும் அனைத்து நுழைவாயில்களும் உடனடியாக திறக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் பாஜகவின் முதன்மையான வாக்குறுதிகளில் ஒன்றாகவும் பூரி ஜெகந்நாதர் கோவில் கதவுகள் திறப்பும் இருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து பாஜக தமது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியது.
கருவூல அறை சாவிகள்: அத்துடன் இல்லாமல் இன்று முதல்வர் மோகன் மாஜி தலைமையில் அமைச்சர் பட்டாளமே பூரி ஜெகந்நாதர் கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் செய்தனர். அப்போது பேசிய முதல்வர் மோகன் மாஜி, இன்று காலை சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மூடப்பட்ட கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன. பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பூரி ஜெகந்நாதரை இனி தரிசனம் செய்யலாம். பூரி ஜெகந்நாதர் கோவில் மேம்பாட்டுக்காக ரூ500 கோடி ஒதுக்கீடு செய்வோம் என்றார். மேலும் ஒடிஷா அமைச்சர் சுரேஷ் பூஜாரி கூறுகையில், ஜெகந்நாதர் கோவில் கதவுகள் ஏன் பூட்டப்பட்டிருந்தன என்கிற விசாரணை அறிக்கையை கேட்டுப் பெறுவோம் என தெரிவித்தார்.
ஒடிஷாவின் பாஜக அரசு, பூரி ஜெகந்நாதர் கோவிலை முன்வைத்து தமது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். தற்போது ஜெகந்நாதர் கோவில் கதவுகளை மட்டும் திறந்துவிட்டுள்ள பாஜக அரசு அடுத்ததாக சர்ச்சைக்குரிய கருவூல அறை சாவி குறித்தும் விசாரணை நடத்தும். தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி, கருவூல சாவி அறைகள் தமிழ்நாட்டுக்கு கொண்டு போய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பிஜூ ஜனதா தளத்தின் விகே பாண்டியனை குறிவைத்து பேசியது பெரும் சர்ச்சையானது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்நாட்டுக்கு மோடி வருகை தந்த போது கறுப்பு கொடியும் காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications