கஞ்சா போதையில் சில்மிஷம்.. உருட்டு கட்டைகளால் நிர்வாண சாமியாரை வெளுத்து கட்டிய திருநங்கைகள்
ஒடிஷாவில் நிர்வாண சாமியாரை வெளுத்து கட்டிய திருநங்கைகள்.
Recommended Video

புவனேஷ்வர்: ஒடிஷாவில் கஞ்சா போதையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கொதித்தெழுந்த திருநங்கைகள் நாகா பாபா எனப்படும் நிர்வாண சாமியாரை புவனேஷ்வரில் வெளு வெளு என அடித்து துவைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிர்வாண சாமியார்களாகிய நாகா பாபாக்களின் ஆசிரமங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படும். எந்த மாநிலத்திலும் இந்த நாகா பாபாக்களுக்கும் அவர்களது ஆசிரமங்களுக்கும் கட்டுப்பாடுகள் இல்லை.

கும்பமேளா காலங்களில் பொது இடங்களில் மண்டையோடு சகிதம் நிர்வாணமாக கஞ்சா புகைத்தபடி வலம் வரும் இந்த நிர்வாண சாமியார்களை பொதுமக்கள் வணங்குவதற்கு போட்டி போடுகிற காட்சிகளும் அரங்கேறும். இதனிடையே ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் நிர்வாண சாமியார் தாக்கப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதில், நிர்வாண சாமியாரை 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தரதரவென இழுத்து வந்து கீழே தள்ளிவிட்டு ஆத்திரம் தீரும் வரை உருட்டுக் கட்டைகளால் அடித்து துவைக்கிற காட்சி இடம்பெற்றுள்ளது. தங்களிடம் கஞ்சா போதையில் நிர்வாண சாமியார்கள் சிலர் சில்மிஷம் செய்ததாலேயே தாக்கினோம் என்கின்றனர் திருநங்கைகள்.
ஒடிஷாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது இந்த வீடியோ. இதனைத் தொடர்ந்து 10 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications