Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏர் இந்தியா விமான விபத்துக்கு பின்.. இப்படி ஒரு காரணமா? புதிய கோணத்தை கையில் எடுத்த அதிகாரிகள்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: ஜூன் 12 அன்று அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் பழைய விமான விபத்து ஒன்றுடன் அதை ஒப்பிட்டு விசாரணை செய்ய உள்ளார். கடந்த 2020 பிப்ரவரியில் கேட்விக்கிலிருந்து ஏர்பஸ் ஏ321 ரக விமானம் ஒன்று புறப்பட்ட உடனேயே இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது. இரண்டையும் ஒப்பிட்டு விசாரணை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

எஞ்சின் கோளாறு காரணமாக அந்த விமானம் புறப்பட்ட 11 நிமிடங்களில் மீண்டும் கேட்விக் விமான நிலையத்திற்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

Ahmedabad Plane Crash

2020 கேட்விக் விமான விபத்து

2020ஆம் ஆண்டு நடந்த அந்த விபத்து குறித்து இங்கிலாந்தின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AIIB) நடத்திய விசாரணையில், எரிபொருள் அமைப்பில் ஏற்பட்ட மாசு காரணமாகவே என்ஜின்கள் செயலிழந்தன என்று கண்டறியப்பட்டது. இருப்பினும், விமானத்தை இயக்குவதற்கு முன்பு பொறியாளர்கள் எந்த தவறும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அகமதாபாத் விபத்து குறித்து விசாரிப்பதற்காக வந்துள்ள குழுவும் இந்த விவகாரத்தை ஆராய்ந்து வருகிறது.

விபத்து குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கு முந்தைய 24 மணி நேரத்தில் AI-171 விமானத்தின் தொழில்நுட்ப பதிவுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் மின்சக்தி செயலிழப்பு ஏற்பட்டது விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

விபத்து குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "கிடைக்கக்கூடிய ஆதாரங்கள், அகமதாபாத் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் (ATC) அதிகாரிகள் அளித்த வாக்குமூலம், விமானத்தை தரையில் இருந்து இயக்கிய பொறியாளர்கள் அளித்த தகவல் மற்றும் விபத்துக்குள்ளான விமான பாகங்களை ஆய்வு செய்ததில் இருந்து.. விமானம் புறப்பட்ட சில நொடிகளில் முக்கிய மின் அமைப்பில் பழுது ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

விமானத்தின் கருப்பு பெட்டியின் டேட்டாக்களை ஆய்வு செய்த பிறகே விபத்துக்கான காரணம் தெரியவரும். விமானம் டேக் ஆஃப் ஆகி மேலே எழும்பியபோது ராம் ஏர் டர்பைனை (RAT) பயன்படுத்த முடியவில்லை. ஏனெனில், விமானம் பாதுகாப்பாக திரும்புவதற்கு தேவையான 3600 அடி உயரத்தைக்கூட எட்டவில்லை.

விமானத்தின் கருப்பு பெட்டிகள் மற்றும் DVR மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவை சேதமடைந்துள்ளதால், தரவை மீட்டெடுப்பது சிக்கலானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். கருப்பு பெட்டிகளை அமெரிக்காவிற்கு அனுப்ப ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், அங்கு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) மேம்பட்ட தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் பதிவுகளை மீட்டெடுக்க உதவ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விமானத்தின் பாகங்களை ஆய்வு செய்ததில் விமானியின் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், விமானிகள் விமானத்தை திருப்ப முயற்சி செய்து இருக்கலாம் என்றும் அதிகாரி கூறினார்.

இது விமானியின் தவறாகத் தெரியவில்லை. விமானம் புறப்பட்ட உடனே மின்சக்தி செயலிழந்ததால், விமானம் பாதுகாப்பான உயரத்திற்கு ஏற முடியவில்லை. போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தில் ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டால், விமானத்தை இயக்குவதற்கு ஒரு மேனுவல் ரிவர்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளது. இது ஒரு பேக்கப் சிஸ்டம். இது RAT மூலம் சக்தியைப் பயன்படுத்தி இயங்கும். ஆனால், விமானம் கீழே விழும்போது பாதுகாப்பாக தரையிறங்க விமானத்திற்கு போதிய உயரம் இல்லை. விமானம் மருத்துவக் கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்தது. விமானம் 3600-4900 அடி உயரத்தில் இருந்திருந்தால், RAT மூலம் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி இருக்கலாம்" என்றார்.

விமானம் விபத்துக்குள்ளானபோது வெறும் 625 அடி உயரத்தில் மட்டுமே பறந்துள்ளது.

என்ஜின் செயலிழப்புக்கான காரணத்தை ஆராயும்போது, முந்தைய 24 முதல் 48 மணி நேரங்களில் விமானத்தின் தொழில்நுட்ப பதிவை ஆய்வு செய்வது முக்கியமானது. ஏனெனில், முந்தைய விமான கேப்டன்கள் அல்லது பராமரிப்பு ஊழியர்கள் ஏதேனும் தொழில்நுட்ப குறைபாடுகளை அனுபவித்திருந்தாலோ அல்லது குறித்து வைத்திருந்தாலோ அது தெரியவரும் என்று அதிகாரி கூறினார்.

விபத்து நடக்கும் முன் அந்த விமானம் பாரிஸிலிருந்து டெல்லிக்கும், டெல்லியிலிருந்து அகமதாபாத்திற்கும் வந்தது. ஜூன் 11-12 தேதிகளில் டெல்லியிலிருந்து பாரிஸுக்கு சென்று திரும்பியது. அதற்கு முந்தைய நாள் டோக்கியோவிற்கு சென்று திரும்பியது. முந்தைய விமானத்தின் பொறியியல் குழு அல்லது விமானிகள் இரு என்ஜின்களின் செயல்திறன் குறித்து ஏதேனும் கருத்து தெரிவித்திருந்தாலோ அல்லது விமானத்தின்போது ECAM (Electronic Centralised Aircraft Monitor) மூலம் ஏதேனும் தகவல் கிடைத்திருந்தாலோ, விமானத்தின் உந்துதல் பிரச்சினைகள் இருந்தாலோ தொழில்நுட்ப பதிவுகளை ஆய்வு செய்து தெரிந்து கொள்ளலாம். இதனால் அந்த பதிவுகள் சோதனை செய்யப்பட்டு வருகின்ற.

அகமதாபாத் விபத்து போயிங் 787 விமானத்தில் நடந்த முதல் விபத்து என்பதால், விசாரணை அதிகாரிகள் எந்த வாய்ப்பையும் தவறவிடாமல் கவனமாக விசாரித்து வருகின்றனர். ட்ரீம்லைனர் விமானத்தில் மேம்பட்ட மின் அமைப்பு உள்ளது. ஒரு என்ஜினை வைத்துக்கொண்டு போதுமான தூரம் பாதுகாப்பாகப் பறக்க முடியும். மேலும், ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டால், மேனுவல் ரிவர்ஷன் மூலம் விமானத்தை கட்டுப்படுத்தி, அருகில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்க முடியும். விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர் மூலம் ஒரு நிமிடத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கலாம் என்று அதிகாரி கூறினார்.

ஆனால் அதில் தற்போது சேதங்கள் ஏற்பட்டு உள்ளதால்.. விபத்துக்கு என்ன காரணம் என்ற இறுதி முடிவை எடுக்க சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+