இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.. ஹார்முஸ் தொல்லை இனி இல்லை..!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள டான்டேவாலா எரிவாயு பகுதியில் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் புதிய இயற்கை எரிவாயு இருப்பை கண்டுபிடித்துள்ளது. உலக அளவில் எரிசக்தி நெருக்கடி நிலவி வரும் இந்தச் சூழலில், இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் எரிசக்தி சுயசார்பு இலக்கை அடைய முக்கிய படியாக அமைந்துள்ளது.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு மூலம் இந்தியா வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதிப்படுத்தியுள்ளார். ஈரான் போருக்கு பின்பு இந்தியாவில் எரிபொருள் இறக்குமதியை எப்படியெல்லாம் குறைக்கலாம் என்பதை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

இந்தியாவின் முன்னணி எரிபொருள் நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் முதன்முறையாக சானு அமைப்பு என்ற ஆழமற்ற பகுதியில் இயற்கை எரிவாயு ஓட்டத்தை வெற்றிகரமாக கண்டுப்படித்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட தளத்தில் இருந்து தினமும் சுமார் 25,000 நிலையான கன மீட்டர்கள் அளவிலான எரிவாயு உற்பத்தி செய்ய முடியும். இந்த எரிவாயு மிகவும் தரமானது என மத்திய அரசு தரப்பில் இருந்து தெரிவித்துள்ளது. காரணம் இங்கு கிடைக்கும் இயற்கை எரிவாயுவில் கார்பன் டை ஆக்சைடு அளவு மிகக் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு குறைந்த அளவிலான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது சமூக ஊடகப் பக்கத்தில் முக்கிய விவரங்களை வெளியிட்டு, இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவின் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு ராஜஸ்தான் பகுதி கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டின் முக்கிய எரிசக்தி மையமாக உருவெடுத்து வருகிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு அந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரித்துள்ளது. மேலும் சுரங்க துறையின் முதலீடுகள் ராஜஸ்தானில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்தியா தனது எரிசக்தித் தேவையில் பெரும்பகுதியை வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே தீர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே புதிய எரிவாயு வளம் கிடைத்தால் இது நாட்டின் இறக்குமதி செலவை பெரிய அளவில் குறைக்கும். இதேபோல் ஹார்மூஸ் முடக்கத்தால் ஏற்படும் பாதிப்பை சற்று குறைக்க முடியும்.
உலக அளவில் எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்களால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வரும் வேளையில், ராஜஸ்தானில் கிடைத்துள்ள இந்தப் புதிய எரிவாயு வளம், இந்தியாவை எரிபொருள் சுயசார்பு நோக்கி வேகமாக அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ளன. இந்தப் புதிய கண்டுபிடிப்பு அந்த வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications