துவங்கிய வேகத்தில் பைக் டாக்சி சேவையை நிறுத்திய ஓலா?
பெங்களூர்: பெங்களூரில் பைக் டாக்சிகள் துவங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அந்த சேவையை ஓலா நிறுவனம் நிறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஓலா மற்றும் உபேர் ஆகிய டாக்சி நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை கடந்த வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தன. இந்நிலையில் முறையான அனுமதி பெறாமல் டாக்சி சேவையை துவங்கியுள்ளதாகக் கூறி கர்நாடக அரசு ஓலா மற்றும் உபேர் பைக் டாக்சிகளை கடந்த சனிக்கிழமை பறிமுதல் செய்தது.

இது குறித்து கருத்து தெரிவிக்க ஓலா நிறுவன சிஓஓ பிரனய் ஜிவ்ராஜ்கா மறுத்துவிட்டார். இந்நிலையில் ஓலா ஆப்பில் பைக் டாக்சி சேவை இன்று காலையில் இருந்து வேலை செய்யவில்லை. ஆப்பில் அப்படி ஒரு சேவையே இல்லை.
இந்நிலையில் ஓலா நிறுவனம் பைக் டாக்சி சேவையை நிறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. அதே சமயம் உபேர் நிறுவனம் பைக் டாக்சிகளை இன்னும் இயக்கிக் கொண்டிருக்கிறது. பாங்காக்கை அடுத்து பெங்களூரில் தான் உபேர் மோட்டோ அதாவது உபேர் பைக் டாக்சிகள் இயக்கப்படுகின்றன.
உபேர் நிறுவனத்திற்கு போட்டியாக துவங்கப்பட்ட ஓலா பைக் டாக்சி சேவை திடீர் என நிறுத்தப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications