பெங்களூரில் உபேரை அடுத்து கார்பூலிங் அறிமுகம் செய்த ஓலா
பெங்களூர்: ஓலா டாக்சி நிறுவனம் பெங்களூரில் இன்று புதிய சேவையை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
ஓலா டாக்சி நிறுவனம் பெங்களூரில் இன்று புதிய சேவை ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் டாக்சியில் தனியாக பயணிக்காமல் பிறருடன் சேர்ந்து பயணிக்கலாம். இந்த ஷேரிங் சேவையின் அறிமுக விலையாக ரூ.50ல் ஓலா டாக்சியில் பயணிக்கலாம்.

இந்த ஷேரிங் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பயண செலவு வெகுவாக குறையும். வாடிக்கையாளர் தான் செல்லும் வழியில் செல்லும் பிறருடன் சேர்ந்து டாக்சியில் பயணிக்கலாம். இந்த சேவை துவக்க கட்டமாக பெங்களூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இந்த சேவை மேலும் 5 நகரங்களில் அறிமுகம் செய்து வைக்கப்பட உள்ளது.
ஷேரிங் சேவை மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் போன பெங்களூரில் நெரிசலை குறைக்க முடியும் என்று ஓலா நம்புகிறது. ஷேரிங் சேவையின்படி அதிகபட்சமாக 3 பேர் ஒரே நேரத்தில் ஒரு டாக்சியில் பயணிக்க முடியும். முன்னதாக கடந்த மாதம் பெங்களூரில் உபேர் நிறுவனம் கார்பூலிங் அதாவது ஷேரிங் சேவையை அறிமுகம் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரில் அலுவலகங்களுக்கு செல்ல, வீடு திரும்ப பலர் டாக்சிகளை நம்பி உள்ள நிலையில் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications