காஷ்மீர் முதல்வராகும் ஓமர் அப்துல்லா.. 2 தொகுதிகளிலும் அமோக வெற்றி.. வாக்கு வித்தியாசத்தை பாருங்க
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் விறுவிறுப்பாக ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் முன்னாள் முதல்வரான ஓமர் அப்துல்லா தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய உள்ள நிலையில் ஓமர் அப்துல்லா முதல்வராக அதிக வாய்ப்புள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) தனித்தனியே களமிறங்கின.
கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 63.45 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ள நிலையில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இதில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். இவர் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவராக உள்ளார். இவர் கந்தர்பால் மற்றும் புட்காம் என 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.
புட்காம் தொகுதியில் ஓமர் அப்துல்லா மொத்தம் 36,010 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிடிபி கட்சியின் ஆகா சையத்தை(பெற்ற வாக்குகள் 17,525) 18,485 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
அதேபோல் கந்தர்பால் தொகுதியில் ஓமர் அப்துல்லா 32,045 ஓட்டுகள் பெற்று வென்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியில் பிடிபி கட்சியின் வேட்பாளர் பஷீர் அகமது மிர் (பெற்ற வாக்குகள் 21,842) என்பவரை 10,203 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதன்மூலம் ஓமர் அப்துல்லா தான் போட்டியிட்ட 2 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 சட்டசபை தொகுதிகளுக்கான ரிசல்ட் முழுவதும் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் ‛இந்தியா' கூட்டணி 49 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.‛இந்தியா' கூட்டணியில் ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி அதிகபட்சமாக 42 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறி உள்ளது. தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து காங்கிரஸ் 6 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் அந்த கூட்டணி 49 தொகுதிகளில் வென்று கூட்டணி ஆட்சியை அமைக்கிறது.
அதேவேளையில் தனித்து போட்டியிட்ட பாஜக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக மாறி உள்ளது. அதேபோல் பிரதான எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட உள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இது அவரது கட்சி சந்தித்த மோசமான தோல்வியாகும். மேலுமு் இந்த தேர்தலில் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி ஸ்ரீகுஃப்வாரா - பிஜ்பெஹாரா தொகுதியில் பிடிபி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications