For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

370வது பிரிவு குறித்து என்னுடன் விவாதிக்க தயாரா?: மோடிக்கு ஒமர் அப்துல்லா சவால்

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப் பிரிவு 370 குறித்து எந்த இடத்திலும் என்னுடன் விவாதிக்க தயாரா என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா சவால் விடுத்துள்ளார்.

அண்மையில் ஜம்முவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, 370வது பற்றிய சாதக பாதக அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து 370வது பிரிவு தொடர்பாக சர்ச்சை வெடித்தது.

Omar Abdullah challenges Narendra Modi for a debate on Article 370 anytime

மத்திய அமைச்சரான பரூக் அப்துல்லாவோ, 10 முறை மோடி பிரதமரானாலும் 370வது பிரிவை நீக்கவே முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முதல்வரான ஒமர் அப்துல்லாவோ, 370 பிரிவு குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என மோடிக்கு சவால் விடுத்துள்ளார்.

மேலும் எந்த நேரத்திலும், எங்கு வேண்டும் என்றாலும் விவாதம் நடத்த தான் தயாராக உள்ளதாகவும் ஒமர் அப்துல்லா அழைப்பு விடுத்துள்ளார்.

English summary
Days after Bharatiya Janata Party (BJP) Prime Ministerial candidate Narendra Modi called for a debate on Article 370, which provides special status to Jammu and Kashmir, state Chief Minister Omar Abdullah on Thursday challenged him for the same.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X