ஜம்மு காஷ்மீர் தேர்தலை பார்வையிட வெளிநாட்டினர் எதற்கு? மத்திய அரசுக்கு ஓமர் அப்துல்லா கேள்வி
ஸ்ரீநகர்: சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க, 16 நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் இன்று ஜம்மு காஷ்மீர் வருகின்றனர். எதெற்கெடுத்தாலும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கூறும் மத்திய அரசு, இப்போது ஏன் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை அழைக்கிறது? என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறும் தேர்தல் என்பதாலும், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்ட பின்னர் நடக்கும் வாக்குப்பதிவு என்பதாலும், இந்த சட்டப்பேரவை தேர்தல் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த 18ம் தேதி 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 61.11% வாக்குகள் பதிவானது. இதையடுத்து, இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், 25.78 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்த தோ்தலுக்காக, 3,502 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில், முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் அப்னி கட்சியின் தலைவர் அல்தாப் புகாரி என பல முக்கிய தலைகள் களமிறங்குகின்றன.
ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளுக்கும், காஷ்மீர் பிராந்தியத்தில் புட்காம், ஸ்ரீநகர் மற்றும் கந்தர்பால் மாவட்டங்களில் உள்ள 15 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நேற்று முன்தினத்துடன் பிரச்சாரம் நிறைவடைந்தது. மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக். 1ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. அக். 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இப்படி இருக்கையில், ஜம்மு காஷ்மீர் தேர்தல் குறித்து பாகிஸ்தான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருகின்றன. இந்த கருத்து பிரசாரத்தை முறியடிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்.
அதாவது, ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை பார்வையிட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 வெளிநாட்டு தூதரகங்களை சேர்ந்த தூதரக அதிகாரிகள் குழு இன்று ஸ்ரீநகர் வருகிறது. ஜம்மு காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு தெரியப்படுத்த மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை அழைத்திருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.
இதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் ஓமர் அப்துல்லா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். "இந்தியாவில் நடக்கும் பிரச்னைகள் குறித்து வெளிநாட்டினர் கருத்து கூறினால்.. உள்நாட்டு விவகாரங்களில் எதற்கு தலையிடுகிறீர்கள் என்று பாஜகவினர் கேட்பார்கள். இப்போது தேர்தலை கண்காணிக்க வெளிநாட்டினரை எதற்கு அழைத்து வருகிறார்கள்? இப்போது நாங்கள் சொல்கிறோம். இது எங்கள் உள்விவகாரம், இதில் வெளிநாட்டினரின் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications