370வது பிரிவை அவ்வளவு எளிதாக மோடி அரசால் நீக்கிவிட முடியாது.. ஒமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசால் எளிதில் நீக்கிவிட முடியாது என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாகா ஸ்ரீநகரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைவதற்கு ஒப்புதல் அளித்தது "ஜம்மு காஷ்மீரின் அரசியல் சாசன சட்டசபை". இந்த அரசியல் சாசன சட்டசபையும் தற்போதைய மாநில சட்டசபையும் ஒன்றல்ல.
இந்த அரசியல் சாசன சட்டசபை அமைக்கப்பட்டு அதனடிப்படையில் ஜம்மு காஷ்மீரின் இந்தியாவின் ஒரு பகுதியாகி அதன் பின்னர்தான் 370வது அரசியல் சாசன பிரிவு உருவாக்கப்பட்டது.
இப்போது இதை நீங்கள் பிரச்சனைக்குரிய விஷயமாக்கும் போது மீண்டும் அரசியல் சாசன சட்டசபையைக் கூட்டியாக வேண்டும்.
மத்திய - மாநில அரசுகளின் உறவை வலுப்படுத்த வேண்டுமெனில் 370வது பிரிவை நீக்குவது போன்ற நடவடிக்கைதான் வழி அல்ல. அப்படி நீக்கினால் ஜம்மு காஷ்மீரத்து மக்களுக்கும் இந்தியாவின் இதர பகுதி மக்களுக்கான இடைவெளிதான் அதிகரிக்கும் என்பதை விரைவிலேயே புரிந்து கொள்வீர்கள்.
பாரதிய ஜனதாவின் அரசியல் நெருக்கடிகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக ஜம்மு காஷ்மீரத்தின் மீது முதல் தாக்குதலை தொடுக்காதீர்கள்.
அரசியல் சாசனப் பிரிவு 370 தான் ஜம்மு காஷ்மீரில் சொத்துகளை வாங்க தடை விதிக்கிறது என்பது அபத்தமானது. அதற்கு முன்னரே பஞ்சாப் பெரும் பணக்காரர்களால் காஷ்மீர மக்களின் நிலம் கொள்ளையடிக்கப்படுவதை தடுக்க மகாராஜாவாலேயே சட்டம் கொண்டுவரப்பட்டது. அதுதான் 370வது பிரிவிலும் சேர்க்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒமர் அப்துல்லா கூறியுள்ளார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications