விடிந்தால் பீகார் தேர்தல்.. திடீரென பாஜகவுக்கு தாவிய ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்! பி.கேவுக்கு ஷாக்!
பாட்னா: பீகார் சட்டசபைக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்க இருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பாஜகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முங்கெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சய் சிங், பாஜகவில் இணைந்து உறுப்பினராகியுள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தல் வரும் நாளை (நவம்பர் 6) மற்றும் நவம்பர் 11 என இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலின்போது 121 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டத் தேர்தலின்போது 122 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். பீகாரில் மொத்தம் 7.4 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 14 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆவர்.

இந்தத் தேர்தலில், பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் தலைமையிலான மகாகட்பந்தன் கூட்டணியும் பிரதான போட்டியாளர்களாக களத்தில் உள்ளன. தேர்தல் வியூக அமைப்பாளராக இருந்து, அரசியல் கட்சி தலைவராக பிரவேசம் எடுத்துள்ள பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சியும் பீகார் தேர்தல் களத்தில் உள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனித்தே இந்த தேர்தலை சந்திக்கிறது. பிரசாந்த் கிஷோர் நேரடியாக இந்த தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போட்டியிடாமல் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்து, அவர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பீகார் சட்டசபஒத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி 3-வது இடத்துக்கு தள்ளப்படும். தேஜஸ்வி யாதவ் அர்த்தமற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார். தற்போது பிஹார் அரசியலில் ஜன் சுராஜ் கால் பதித்திருக்கிறது. இதன்மூலம் பீரில் புதிய வரலாறு எழுதப்படுகிறது.
பீகார் அரசியலில் மிக நீண்ட காலமாக குழப்பம் நீடித்து வந்தது. லாலு ஆட்சியை விரும்பாதவர்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக ஆட்சியை விரும்பாதவர்கள் லாலுவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். வரும் தேர்தலில் ஜன் சுராஜுக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க உள்ளனர் எனப் பிரச்சாரத்தில் பேசி வந்தார் பிரசாந்த் கிஷோர்.
பீகாரில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர் பாஜகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முங்கெர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சய் சிங், தற்போது பாஜகவில் இணைந்து உறுப்பினராகியுள்ளார்.
அவர் பாஜகவின் முங்கெர் தொகுதி வேட்பாளர் குமார் பிரனாய் முன்னிலையில் பாஜக உறுப்பினராக இணைந்துகொண்டார். அதோடு இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனது ஆதரவை வழங்கினார். நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அவர் பாஜகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் இணைந்த பிறகு, சஞ்சய் சிங் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பீகார் புதிய உயரங்களுக்கு உயரும் என்று நம்புவதாகக் கூறினார். மேலும், உண்மையான' மாற்றத்தைக் கொண்டுவர, உறுதியான மற்றும் வலுவான தலைமை தேவை என்றும், அதை ஜன் சுராஜ் வழங்க வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.
"தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதற்கு எனது ஆதரவை வழங்குகிறேன். அவர்கள் வெற்றி பெற நான் உதவுவேன், மேலும் அவர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications