எப்படியெல்லாம் விபத்து நடக்குது பாருங்க.. பரிதாபமாக பலியான உயிர்! பட்டாசை கவனமாக கையாளுங்கள்!
அமராவதி: ஆந்திராவில் ஸ்கூட்டியில் வைத்து பட்டாசுகளை எடுத்து சென்றபோது, திடீரென பட்டாசுகள் வெடித்துள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் ஏலுரு மாவட்டத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. தீபாவளிக்காக இளைஞர்கள் இருவர் வெங்காய வெடி உள்ளிட்ட பட்டாசுகளை வாங்கிக்கொண்டு அதை ஆக்டிவா பைக்கில் வைத்து கொண்டு சென்றிருக்கின்றனர். ஓரிடத்தில் மேடு பள்ளம் வந்திருக்கிறது. வேகமாக வந்த பைக், அதில் ஏறி இறங்க.. உடனடியாக பட்டாசுகள் உரசி தீப்பிடித்து எரிந்துள்ளன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியுள்ளன. இதில் பைக்கில் இருந்த இருவரும் கடுமையான தீக்காயம் அமைந்தநனர்.

மட்டுமல்லாது, விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் சிலர் இருந்திருக்கின்றனர். அவர்களும், கடுமையாக தீக்காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், வெங்காய வெடியில் உரசல் ஏற்பட்டதே, வெடி விபத்துக்கு காரணம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் பைக் ஓட்டி வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டாசுகளை கவனமாக கையாள வேண்டும் என்று தீயணைப்பு துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக தீபாவளி தினத்தன்று கவனக்குறைவாக பட்டாசை கையாளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும், இது உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திடுவிடுகிறது என்றும் தீயணைப்புதுறை கூறியுள்ளது.
பட்டாசுகளை கொண்டு செல்வதற்கும், அதை கையாள்வதற்கும் கடைகாரர்கள் முன் அனுபவம் கொண்ட பணியாட்களை வைத்திருப்பார்கள். அதே நேரம், மக்கள் பட்டாசை வாங்கிக்கொண்டு செல்லும்போது மிகுந்த கவனமும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மட்டுமல்லாது பட்டாசுகள் பாதுகாப்பாகவே பேக்கிங் செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால் இதை கவனக்குறைவாக கொண்டு செல்லும் போது விபத்து ஏற்பட்டுவிடுகிறது.
பட்டாசு காரணமாக தீ விபத்து ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக தீக்காயம் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றினால் கொப்பளம் வரும் என்று நினைத்து தண்ணீரை ஊற்றாமல் வைத்திருப்பார்கள். அப்படி செய்வது தவறு என தீயணைப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, மத்திய நிலவரப்படி 82 பேர் தீக்காயம் அடைந்துள்ளனர். இதில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். பலரும், இன்னும் சிகிச்சையில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications