பாபா ராம்தேவ் நிறுவனத்தில் நடந்த மோதலில் ஒருவர் பலி: ராம்தேவின் சகோதரர் கைது
ஹரித்வார்: ஹரித்வாரில் உள்ள யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி புட் மற்றும் ஹெர்பல் பார்க் நிறுவனத்தில் பாதுகாவலர்களுக்கும், ஹரித்வார் டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 4 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ளது யோகா குரு பாபா ராம்தேவுக்கு சொந்தமான பதாஞ்சலி புட் மற்றும் ஹெர்பல் பார்க் நிறுவனம். அந்த இடத்தில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் பணியை உள்ளூர் போக்குவரத்து யூனியன் ஆட்களுக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் டிரக் யூனியனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து புட் பார்க்கின் பாதுகாவலர்களுக்கும், டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. மோதலில் தல்ஜீத் என்பவர் கொலை செய்யப்பட்டார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராம்தேவின் சகோதரர் ராம் பரத் மற்றும் சிலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராம் பரத் தான் மோதலை தூண்டிவிட்டதாக போலீஸ் எஸ்.பி. ஸ்வீட்டி அகர்வால் தெரிவித்துள்ளார்.
பதாஞ்சலி நிர்வாகத்தினருக்கும், ஹரித்வார் டிரக் யூனியன் ஆட்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மோதலில் முடிந்தது என்று அகர்வால் மேலும் தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications