ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொலை !
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே உள்ள ஜக்குரா பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக இந்திய உளவுத்துறை, பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த மாநில போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் இணைந்து தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் தாக்குல் நடத்தியுள்ளனர்.
இந்த சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான். மேலும், மற்றொரு தீவிரவாதி பதுங்கி இருப்பதால் அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications