இன்னொரு ஒடிஷா ஆம்புலன்ஸ் அவலம்... மருத்துவமனை வாசலிலேயே குழந்தை பெற்ற பெண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பஹன்ஞ்நகர்: ஒடிஷாவில் ஆம்புலன்ஸ் உரிய நேரத்துக்கு வராததால் மருத்துவமனை வாசலிலேயே பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

ஒடிஷாவில் ஆம்புலன்ஸ் சேவை மிக மோசமாக இருப்பதை அம்பலப்படுத்தும் பல சம்பவங்கள் அண்மைக்காலமாக வெளியாகி உள்ளன. ராயகடா மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை ஆம்புலன்ஸ் இல்லாததால் ஸ்ட்ரெச்சரில் சுமந்து உறவினர்கள் ஆற்றைக் கடந்து மருத்துவமனையில் அனுமதித்த சம்பம் நேற்று நிகழ்ந்தது.

One more Ambulance denied case, Woman delivers baby near hospital gate

இந்நிலையில் கஞ்சம் மாவட்டம் பஹன்ஞ்நகரில் மற்றொரு சம்பவம் இன்று நிகழ்ந்துள்ளது. அசனபள்ளி கிராமத்தைச் சேர்ந்த பாசுமதி நாயக் என்ற கர்ப்பிணி பெண் பிரசவ வலியால் துடித்திருக்கிறார். அவரை உறவினர்கள் உடனடியாக பஹன்ஞ்நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் மருத்துவர்களோ பெர்ஹாம்பூர் எம்கேசிஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து உறவினர்கள் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வரவில்லை.

மருத்துவமனை வாசலில் காத்திருந்த போது பாசுமதி நாயக்குக்கு பிரசவ வலி அதிகமானது. அங்கேயே நடுவீதியில் குழந்தை பிறந்தது. பின்னர் மீண்டும் பஹன்ஞ்நகர் மருத்துவமனையிலேயே பாசுமதி நாயக் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here are one more ambulance denied case in Odisha. A woman today delivered a baby near the gate of Bhanjanagar hospital due to unavailability of ambulance in Odisha.
Please Wait while comments are loading...