பதான் காவல் நிலையத்தில் 2 காவலர்களால் 14 வயது சிறுமி பலாத்காரம்: ஒருவர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் காவல் நிலைய வளாகத்தில் 14 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு போலீசாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தில் முஸாஜங் பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ம் தேதி இரண்டு போலீசாரால் கடத்தப்பட்டார். பின்னர் அச்சிறுமியை காவல் நிலைய வளாகத்தில் வைத்து போலீசார் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக வீர்பால்சிங் யாதவ், அவினிஷ் யாதவ் என்னும் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீசார் இருவரும் தலைமறைவானார்கள். அவர்களைப் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப் பட்டது.
இந்நிலையில், அவ்னிஷ் யாதவ் என்ற காவலர் பரேலி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவர் டெல்லிக்குத் தப்ப முயன்றபோது பிடிபட்டதாக போலீஸார் கூறியுள்ளனர். மற்றொரு குற்றவாளியான வீர்பால்சிங் யாதவைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்தாண்டு மே மாதம் பதானில் தலித் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications