For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவால் தேடப்பட்ட கொலையாளி ஹைதராபாத்தில் சிக்கினான்!

By Mathi
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: அமெரிக்காவில் மனைவியை கொலை செய்த வழக்கில் 23 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தப்பி வந்த அமித் முத்தாமாலி லிவிங்ஸ்டன் ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தை சேர்ந்த லிவிங்ஸ்டன் அமெரிக்காவில் தனது மனைவியை கொலை செய்துவிட்டான். இந்த வழக்கில் லிவிங்ஸ்டன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. பின்னர் கடந்த 2007ம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 23 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனையடுத்து அவர் தப்பி ஓடிவிட்டார். குற்றவாளி குறித்து இன்டர்போலுக்கு அமெரிக்கா தகவல் கொடுத்தது. 2008ஆம் ஆண்டு லிவிங்ஸ்டனுக்கு எதிராக இண்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

தற்போது லிவிங்ஸ்டன் ஹைதராபாத்தின் சாய்னிபுரி என்ற இடத்தில் அம்மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கி கொண்டார். தற்போது லிவிங்ஸ்டனை கைது செய்து சிறையில் அடைத்தது.

தற்போதைய விசாரணையில் அமெரிக்க நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் சரண் அடையாமல் லிவிங்ஸ்டன் போலி பாஸ்போர்ட் மூலம் இந்தியாவிற்கு வந்தது தெரியவந்துள்ளது.

English summary
Amit Muddamalli Livingston, one of the America's most wanted fugitives, was arrested in Hyderabad, police said Saturday. Livingston was absconding since 2007 after a US court sentenced him for 23 years in prison for killing his girlfriend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X