'ஒன்இந்தியா'வுக்கு சிஎம்எஸ்பி மாஸ் மீடியா விருது!
பெங்களூர்: பல்வேறு இந்திய மொழிகளில் தலை சிறந்த செய்தி இணையதளமாக விளங்கும் ஒன்இந்தியா.இன் இணையத்திற்கு 2014ம் ஆண்டுக்கான ஊடகம் மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்பு கவுன்சிலின் 2013ம் ஆண்டுக்கான மாஸ் மீடியா விருது கிடைத்துள்ளது.
பெங்களூர் ஜேபி நகரில் உள்ள எம்.எல்.ஆர். மாநாட்டு மையத்தில் நடந்த விழாவில் இந்த விருதினை ஒன்இந்தியா பெற்றது. விருதினை ஒன்இந்தியா நிறுவனம் சார்பாக அதன் மனிதவள மேம்பாட்டுப் பிரிவு முதுநிலை மேலாளர் கே.மகேஷ் பெற்றுக் கொண்டார்.
கடந்த 2013ம் ஆண்டு சிறந்த வெப் மீடியாவுக்கான விருதை ஒன்இந்தியா தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு சிறந்த மாஸ் மீடியாவுக்கான விருது கிடைத்துள்ளது.

ஊடக உலகைச் சேர்ந்த ஏராளமான பத்திரிகையாளர்கள், பல்வேறு பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், டெல்லி எம்.பி.யுமான உதித் ராஜ், உ.பி. எம்.பி. நீலம் சொங்கர் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிஎம்ஸ்பி..
நாடு முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் உள்ளூர் நாளிதழ்கள், பத்திரிகைகள், செய்தி டிவி சேனல்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அமைப்புதான் சிஎம்எஸ்பி எனப்படும் ஊடகங்கள் மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்பு கவுன்சில் ஆகும்.
தேசிய செய்தித்தாள் விற்பனையாளர்கள் கவுன்சில், தேசிய மனித உரிமை கவுன்சில், தேசிய பிரஸ் கிளப் ஆகியவை இதன் அங்கத்தினர் ஆகும்.


Click it and Unblock the Notifications
