வெங்காய விலை கடுமையாக உயரும்.. எச்சரித்த உளவுத்துறை.. மெத்தனமாக இருந்த அரசு
டெல்லி: வெங்காய விலை கடுமையாக உயரும் என்று 2 மாதங்களுக்கு முன்பே மத்திய அரசை உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் சம்பந்தப்பட்ட துறைகள் அலட்சியமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கடந்த ஒரு வருடமாக பல்வேறு உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்காணித்து மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது ஐபி.
2 மாதங்களுக்கு முன்பே, வெங்காய விலை ஏற்றம் குறித்தும் எச்சரித்துள்ளது. ஆனால் அதை மத்திய அரசின் துறைகள் சரிவர கவனிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளன.

கடுமையான விலை உயர்வு
நாடு முழுவதும் வெங்காயம் உள்பட பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயரும் என்று ஐபி எச்சரித்துள்ளதாம்.

அத்தனைத் துறைகளுக்கும் உரிய தகவல்
மேலும் இதுதொடர்பான தகவலை உரிய துறைகளுக்கு உடனடியாகவும் அது அனுப்பி வைத்து எச்சரித்துள்ளது.

தேமே என்று இருந்த துறைகள்
ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களும், துறைகளும் இந்த எச்சரிக்கையை சரிவர பொருட்படுத்தாமல் அலட்சியம் காட்டியுள்ளனவாம்.

பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் கூட எச்சரிக்கை
இந்தத் தகவலை பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் கூட உளவுத்துறை அனுப்பி வைத்திருந்ததாம். குறிப்பாக வெங்காய விலை மிகக் கடுமையாக உயரும் என்று இந்த செய்தியில் ஐபி குறிப்பிட்டிருந்ததாம்.

பதுக்கலே முக்கியக் காரணம்
வெங்காயப் பதுக்கல் அதிக அளவில் நடைபெறுவதாலும், இதனால் வெங்காய விலை கடுமையாக உயரும் என்றும் ஐபி எச்சரித்திருந்ததாம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications