For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்கள் வேலை கேட்டால் யோகா பற்றி பேசுகிறாரே பிரதமர் மோடி: ராகுல் தாக்கு

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு கேட்கிறார்கள்.. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ யோகா பற்றி பேசுகிறார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்.

நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த மக்களை ராகுல்காந்தி நேரடியாக சந்தித்து வருகிறார். இன்று மேற்கு வங்காளத்தில் உள்ள சணல் ஆலை ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

Only Cong can bring development in Bengal: Rahul

அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சி செய்த இடதுசாரிகள் கட்சி மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கி விட்டன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முன்னேற்றம் அடையும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் முன்னேற்றம் என்பது இல்லை. இம்மாநிலம் முடங்கிப் போய்தான் உள்ளது

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர வேண்டும். காங்கிரசால் மட்டுமே இத்தகைய முட்டுக்கட்டைகளை உடைத்து வாகனங்கள் உற்பத்தியில் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முடியும்.

நகர்ப்புற எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களை மத்திய அரசு அபகரிக்க முயல்கிறது. மக்கள் வேலைவாய்ப்பைக் கேட்டால் பிரதமர் மோடியோ யோகாவை பற்றி பேசுகிற நிலைமைதான் இருக்கிறது.

இவ்வாறு ராகுல் கூறினார்.

English summary
Claiming that both the Left Front and the Trinamool Congress have failed the people of West Bengal, Rahul Gandhi on Saturday said that only Congress can bring the state back on the path of development.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X