சிந்தியா வழியில் சச்சின் பைலட்?.. ராஜஸ்தானில் காங். ஆட்சியை கவிழ்க்க திட்டமா? உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கோஹ்லட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர் கொடி தூக்கி இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வர தொடங்கி உள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் சார்பாக மூத்த தலைவர் அசோக் கோஹ்லட் ஆட்சி செய்து வருகிறார். அங்கு துணை முதல்வராக சச்சின் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையில் முதல்வர் பதவிக்கு பெரிய போட்டி நிலவியது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து அசோக் கோஹ்லட்டை முதல்வராக்கினார்.

ராஜஸ்தான் இப்பாதை

ராஜஸ்தான் இப்பாதை

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

பாஜக திட்டம்

பாஜக திட்டம்

பாஜகவிற்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த நிலையில் அங்கு 20 எம்எல்ஏக்களை இழந்தால் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும். இந்த நிலையில் அசோக் கோஹ்லட்டிற்கு எதிராக சச்சின் பைலட் அங்கே போர் கொடி தூக்கி இருப்பதாக கூறுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இது தொடர்பாக 20 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒன்றாக புகார் அளித்தனர். பாஜக எங்களை வளைக்க பார்க்கிறது என்று அவர்கள் புகார் வைத்தனர்.

டெல்லி சென்றார்

டெல்லி சென்றார்

இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியில் ராஜஸ்தானில் இருக்கும் 20 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு சச்சின் பைலட் டெல்லி சென்றுவிட்டார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இது தொடர்பாக உறுதி படுத்தப்படாத தகவல்கள் வருகிறது. சச்சின் பைலட் இன்று நடந்த காங்கிரஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறுகிறார்கள். அதோடு சச்சின் பைலட் மீது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

சிந்தியா எப்படி

சிந்தியா எப்படி

இதனால் விரைவில் ஜோதிராதித்ய சிந்தியா வழியில் சச்சின் பைலட் செல்ல வாய்ப்பு உள்ளது என்று என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் 18 வருடமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய பிரதேசத்தில் தனக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லை என்று கோபத்தில் இருந்தார். இதையடுத்து 22 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி அங்கு ஆட்சியை கலைத்தார்.இதனால் மத்திய பிரதேசத்தில் ஒரே வருடத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+