பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு.. காஷ்மீரின் உரியில் தாக்க முயற்சி.. முறியடித்த 19 CISF வீரர்கள்.. பரபரப்பு தகவல்
ஜம்மு காஷ்மீர்: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஜம்மு காஷ்மீரில் உரி என்ற இடத்தில் நீர்மின்திட்டத்தை செயல்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த திட்டத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த 19 மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி சதிதிட்டத்தை முறியடித்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கடந்த மே மாதம் 7 ம்தேதி தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் நுழைந்து நம் நாட்டின் ஏவுகணைகள் அதிரடி தாக்குதல் நடத்தின. 9 பயங்கரவாத முகாம்கள், ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை நம் நாட்டின் படைகள் அழித்தன.

இதில் பாகிஸ்தான் கதிகலங்கிப்போனது. அதோடு பதிலுக்கு பாகிஸ்தானும் நம்மை தாக்க முயன்றது. ட்ரோன், போர் விமானம், ஏவுகணைகளை பாகிஸ்தான் அனுப்பியது. இவை அனைத்தையும் நம் படை வீரர்கள் வானிலேயே இடைமறித்து தாக்கி அழித்தனர். அதேவேளையில் பாகிஸ்தானை நம் நாட்டின் துல்லிய தாக்குதல் நிலை குலைய செய்தது.
இதனால் வேறு வழியின்றி பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. மே 10ம் தேதி பாகிஸ்தான் ராணுவ அதிகாரி நம்மை தொடர்பு கொண்டு எங்களை தாக்காதீங்க என்று கூறி சரணடைந்தார். இதையடுத்து நம் நாடும் தாக்குதலை நிறுத்தியது. இருப்பினும் தாக்குதலை மட்டுமே நம் நாடு நிறுத்தி உள்ளது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்தவில்லை. பாகிஸ்தான் மீண்டும் எல்லையில் சீண்டினால் ‛ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக உரிய பதிலடி கொடுக்க வீரர்கள் தயாராக உள்ளனர்.
இதனால் எல்லையில் மட்டும் இன்னும் பதற்றம் தணியவே இல்லை. தொடர்ந்து பாகிஸ்தான் நம்மை சீண்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க பல்வேறு புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டே வருகின்றன. அந்த வகையில் தான் ஜம்மு காஷ்மீரின் உரியில் உள்ள நம் நாட்டின் நீர்மின் திட்டத்தை குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயன்றதும், அதனை நம் நாட்டின் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் 19 பேர் சேர்ந்து முறியடித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மே 7 ம் தேதி நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணைகளை ஏவி துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயன்றது. அந்த வகையில் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லமா மாவட்டத்தில் உள்ள உரி நீர்மின் சக்தி திட்டங்களை ( Uri hydroelectric power projects) குறிவைத்தது. இந்த இடத்தை பாகிஸ்தானால் எளிதாக தாக்க முடியும். ஏனென்றால் இது இருநாட்டின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அமைந்துள்ளது.
ஜீலம் நதியின் குறுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை முன்கூட்டியே நம் நாடு அறிந்து இருந்தது. பாகிஸ்தான் உரியை நோக்கி அட்டாக் செய்யலாம் என்று விழிப்போடு இருந்தது. இதனால் உரி நீர்மின் சக்தி திட்டங்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் கண்காணிப்பு பணிக்காக நியமிக்கப்பட்டு இருந்த 19 மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் உஷாராக இருந்தனர். நம் நாடு பாகிஸ்தானை அட்டாக் செய்த உடன், நீர்மின் சக்தி திட்டங்களை செயல்படுத்தும் இடத்தில் உள்ள அனைத்து மின்விளக்குகளையும் அணைத்தனர்.
அதன்பிறகு அந்த இடத்தை நோக்கி வந்த ட்ரோன்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தினர். அதுமட்டுமின்றி அருகே உள்ள கிராமத்தில் வசிக்கும் 250 பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்றனர். வீடு வீடாக சென்று பொதுமக்களை எழுப்பி அவர்களை அருகே உள்ள பதுங்கு குழிக்குள் பத்திரமாக தங்க வைத்தனர். இதனால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.
இந்த பணியை கமாண்டண்ட் ரவி யாதவ் தலைமையில், துணை கமாண்டண்ட் மனோகர் சிங், உதவி கமாண்டண்ட் சுபாஷ் குமார் உள்ளிட்டவர்கள் தலைமையிலான வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தி காட்டினர். இதுபற்றி ஏஎஸ்ஐ குர்ஜித் சிங் கூறுகையில், ‛‛உரி II திட்டத்தை நோக்கி வந்த ட்ரோன்களை நம் வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேபோல் நமது பிற வீரர்களும் ஏராளமான ட்ரோன்களை சுட்டு வீழ்த்தினர். எதிரியின் ட்ரோன் நம் நாட்டின் திட்டத்தில் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை'' என்றார். இதையடுத்து 19 மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
CISF Personnel Honoured With The DG’s Disc For Exceptional Bravery During Operation Sindoor
— CISF (@CISFHQrs) November 25, 2025
Amid intense cross-border shelling in May 2025, CISF teams at Uri Hydro Electric Projects displayed extraordinary courage, safeguarding vital national assets and evacuating 250 civilians… pic.twitter.com/NPd0KkHaVp
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8 ம்தேதி உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ராணுவ முகாமை குறிவைத்து ஜெய்ஷ இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 19 பேர் வீர மரணமடைந்தனர். 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். அதன்பிறகு நம் படை வீரர்களுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
6 மணிநேரம் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 9 நாட்கள் கழித்து நம் படை வீரர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமில் தாக்குதல் நடத்தினர். இதில் 100 பயங்ரகவாதிகள் கொல்லப்பட்டனர். அதன்பிறகு 2வது முறையாக உரியை பாகிஸ்தான் குறிவைத்து தாக்க முயன்றது. ஆனால் நம் வீரர்கள் திறமையாக செயல்பட்டு பாகிஸ்தானின் சதியை முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications