நாடாளுமன்ற விவாத்தில் மோடி பங்கேற்கும் வரை அமளி- அதிமுக திமுக உட்பட எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு மோடி வரும் வரை அமளியில் ஈடுபட எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி: ரூபாய் நோட்டுக்கள் செல்லாது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை கண்டித்து வருகின்றன. இதுதொடர்பாக இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வரும் வரை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுவது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து ரூபாய் நோட்டு செல்லாது விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டு வருகின்றன. இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரும் 28ம் தேதி நாடு முழுவதும் கண்டன நாள் அனுசரிக்கப்படும் என்று நேற்று முன்தினம் முடிவெடுத்தன. தொடர்ந்து, நேற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி அவைக்கு வராமல் விவாதம் நடத்தக் கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு அதேபோன்று நடத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் ரூபாய் நோட்டு செல்லாது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும் என்றும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம் தொடர்பாக பதில் தர வேண்டும் என்றும் அதுவரை அமளியில் ஈடுபடுவது என்றும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான அதிமுக, எதிர்க்கட்சியான திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் என அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications