அவர்களே சும்மா இருக்கும்போது.. ஸ்டாலினுக்கு என்ன அவசரம்.. காங். கூட்டணி கட்சிகள் அதிருப்தி
Recommended Video

டெல்லி: கூட்டணி கட்சியினருடன் கலந்தாலோசிக்காமல் பிரதமர் வேட்பாளர் ராகுல் என ஸ்டாலின் அறிவித்துள்ளது எதிர்க்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எப்படியாயினும் தோற்கடிக்க வேண்டும் என காங்கிரஸ் போராடி வருகிறது. இவர்களுக்கு உறுதுணையாக திமுகவும் தேசிய கட்சிகளும் கரம் கோர்த்துள்ளன.
இதற்கு முன்னோட்டமாக நேற்று கருணாநிதி சிலை திறப்பு விழாவையொட்டி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பேசிய போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிகிறேன். பாசிச மோடி அரசை வீழ்த்தும் வல்லமை அவருக்கு உண்டு. ராகுலின் கரத்தை நாம் வலுப்படுத்துவோம் என ஸ்டாலின் பேசினார்.

அதிருப்தியில்
கூட்டணி கட்சியினரை கலந்தாலோசிக்காமல் பிரதமர் வேட்பாளர் ராகுல் என ஸ்டாலின் அறிவித்ததற்கு திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பகுஜன் சமாஜ் கட்சி சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை அதிருப்தியில் உள்ளன.

வரவேற்கத்தக்கது அல்ல
இதுகுறித்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். நாங்கள் மட்டுமல்ல, மற்ற கட்சியினரும் இதுகுறித்து அதிருப்தியில் உள்ளனர். மற்ற கட்சிகளுடன் கூட்டணியில் இருக்கும்போது இதுபோன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது அல்ல. மேலும் திரிணமூல் காங்கிரஸுடன் ராகுலுக்கு சுமூக உறவு இல்லை.

காங்கிரஸே சும்மா இருக்கிறார்கள்
இது கூட்டணி கட்சிகளிடையே உள்ள ஒற்றுமையை சீர்குலைக்கும். பொதுவாக பிரதமர் வேட்பாளர் என்பவர் லோக்சபா தேர்தலுக்கு பின்னர்தான் அறிவிக்கப்படுவார். அதிலும் கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை செய்து விட்டே முடிவு எடுக்கவேண்டும். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியே யார் பெயரையும் குறிப்பிடாத போது மற்ற கட்சிகள் ஏன் இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கின்றன? என்று கேள்வி எழுப்பியுள்ளன.

இத்தனை கட்சிகள் அதிருப்தி
ஸ்டாலினின் பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட்கள் ஆகியன அதிருப்தியில் உள்ளதாக எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.
-
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications