தினகரனுக்கு குக்கர் சின்னம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு

தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு தினகரன் வெற்றி பெற்றார். இதை அடிப்படையாக கொண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உட்பட எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் பயன்படுத்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

OPS appeals Cooker symbol given to Dinakaran in SC

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து அவர் பரிந்துரை செய்த கட்சியின் பெயரில் ஒன்றை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தனர்.

அதிமுக கட்சி பெயர் மற்றும் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கை தொடர்ந்து நடத்தி இரட்டை இலை சின்னத்தையும், கட்சியையும் மீட்போம். அதுவரை நடைபெறும் தேர்தல்களில் குக்கர் சின்னத்தை பயன்படுத்துவோம் என்று கூறியிருந்தார் தினகரன்.

இந்த நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முதல்வர் சார்பில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் ஓபிஎஸ் தரப்பில் மதுசூதனன் , செம்மலை ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+