தாய்மொழி பாடலுக்கு ஆட மறுத்த டான்சர் சுட்டுக் கொலை... திருமண விழாவில் அதிர்ச்சி!
பாலியா: உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமண விழா ஒன்றில் தாய்மொழிப் பாடலுக்கு ஆட மறுத்தப் பெண் சுட்டுக் கொலை செய்யப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பெண் நடனக் கலைஞர் பியூ (23). திருமண விழா உள்ளிட்டவற்றில் நடனம் ஆடுவது பியூவின் தொழில்.
இந்நிலையில், உத்திரப்பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் கலைநிகழ்ச்சியில் பியூ நடனமாடினார். அப்போது அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர் தங்களது தாய்மொழிப் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும்படி பியூவை வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அதற்கு நடனமாட பியூ மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பப்லுகுமார் என்ற பார்வையாளர் பியூவை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பியூ பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பியூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பப்லுகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் திருமண வீட்டில் நிலவிய சந்தோஷம் மறைந்து சோகமான சூழ்நிலை உண்டானது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications