திருமணம் செய்வதாக உடலுறவு.. பின் நோ சொல்வதால் மட்டும் அதை பலாத்காரமாக கருத முடியாது! ஒரிசா ஐகோர்ட்
கட்டக்: பாலியல் திருமணம் செய்து கொள்வதாக உறவு வைத்துக் கொண்டு, அதன் பிறகு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் தொடர்ந்த வழக்கில் ஒரிசா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
திருமணம் செய்து கொள்வதாகப் பெண்களை ஏமாற்றும் சில இளைஞர்கள், அவர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிடுவார்கள். இந்த வழக்கில் இப்படி ஏமாற்றும் ஆண்கள் மீது பாலியல் பலாத்கார நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம் ஒருமித்த சம்மதத்துடன் உறவு கொண்டு, அதன் பிறகு வேறு சில காரணங்களால் பிரேக்ஆப் காரணமாகப் பிரியும் போதும், சில பெண்கள் பாலியல் பலாத்கார புகார்களை முன்வைப்பதாகக் கூறப்படுகிறது.

பலாத்கார வழக்கு: இதற்கிடையே பாலியல் பலாத்கார வழக்கில் ஒடிசா உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. அதாவது திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதைக் கேட்டு ஒருமித்த சம்மதத்துடன் உடல் உறவு கொண்ட பிறகு, வேறு சில காரணங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனால், அதைப் பலாத்காரமாகக் கருத முடியாது என்று ஒரிசா உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் புவனேஸ்வரைச் சேர்ந்த ஒருவர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை ஒரிசா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அவரது பெண் தோழி ஒருவர் தான் இந்த வழக்கைத் தொடர்ந்து இருந்தார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருணமாகியிருந்தது. இருப்பினும், அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்துள்ளது.
என்ன நடந்தது: அப்போது தான் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபருக்கும் இந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் மெல்ல உறவாக மாறியுள்ளது. அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் உறுதியளித்த நிலையில், இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர்.
இதற்கிடையே சில காலம் கழித்து திருமணம் செய்த கொள்ள அந்த நபர் மறுத்துள்ளார். அதன் பின்னரே அந்த பெண் அவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். இது தொடர்பான வழக்கு ஒரிசா ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், இதை நீதிபதி ஆர்.கே.பட்டாநாயக் விசாரித்து வந்தார்.
தீர்ப்பு: இந்த வழக்கில் தீர்ப்பளித்த அவர், "நிஜமாகவே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அதன் பிறகு அது நடக்காமல் போவதற்கும், வேண்டுமென்றே திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யாக வாக்குறுதி அளிப்பதற்கும் ஒரு மெல்லிய வேறுபாடு இருக்கவே செய்கிறது. எனவே, இதை பாலியல் பலாத்காரமாகக் கருத முடியாது" என்று தெரிவித்தார்.
முன்னதாக சுப்ரீம் கோர்டும் இதேபோன்ற வழக்கில் உத்தரவிட்டிருந்தது. வழக்கு ஒன்றில் சுப்ரீம் கோர்ட், "பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து, அதன் பிறகு இருவரும் உடல் ரீதியான உறவை வைத்திருந்து, அதன் பிறகு வேறு சில காரணங்களால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனால், அதை பாலியல் பலாத்காரம் கருத முடியாது.
எந்தவொரு உண்மையான உறவும் பல காரணங்களால் முடிவுக்கு வரக் கூடும். அவை அனைத்தையும் பலாத்காரமாக நம்மால் கருத முடியாது" என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது.












Click it and Unblock the Notifications