மிஸ்டர் மோடி.. ஹைதராபாத்தில் போட்டியிட தயாரா? சவால் விடுகிறது மஜ்லிஸ் கட்சி!
ஹைதராபாத்: குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி ஆந்திர மாநிலம் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா என்று மஜ்லிஸ் கட்சி சவால்விடுத்துள்ளது.
ஆந்திராவில் மஜ்லிஸ் கட்சிக்கு ஹைதராபாத்தில் செல்வாக்கு உள்ளது. இக்கட்சியின் தலைவர் ஒவைசி அசாதுதீன் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.

மஜ்லிஸ் கட்சியின் 56-வது ஆண்டு விழா ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் பேசிய ஒவைசி அசாதுதீன், சீமாந்திராவில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மஜ்லிஸ் கட்சி பின் வாங்காது. அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக நமது கட்சி இருக்கும்.
சீமாந்திரா அரசியலில் எம்.ஐ.எம். முக்கிய பங்கு வகிக்கும். பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எம்.ஐ.எம். கட்சி போராடும். வரும் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்தால் தெலுங்கானா பகுதியில் அக்கட்சி தோல்வியை சந்திக்கும்.
மோடிக்கு ஆதரவாக அலை வீசுவதாக சொல்கிறார்கள். செல்வாக்கு இருந்தால் அத்வானியோ, மோடியோ ஹைதராபாத் தொகுதியில் போட்டியிட தயாரா? என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications