ஐஎன்எக்ஸ் விவகாரம்: ப. சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டம்?
ஐஎன்எக்ஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ305 கோடி அன்னிய முதலீட்டை முறைகேடாக பெற்றது என்பது சிபிஐ வழக்கு. ஐஎன்எக்ஸ் நிறுவனத்தின் இம்முறைகேடுக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் உடந்தையாக இருந்தது என்பதும் குற்றச்சாட்டு.

இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். முன்னதாக கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இம்முறைகேடு தொடர்பாக நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திடமும் சிபிஐ விசாரணை நடத்தக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டன் சென்றிருந்த ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதால் அப்பயணத்தை ரத்து செய்து நாடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications