மீண்டும் சர்ச்சையில் ஆர்.கே.பச்சோரி... சில்மிஷப் பேச்சுக்களை புட்டுப் புட்டு வைத்த முன்னாள் ஊழியை
டெல்லி: தேரி அமைப்பின் துணைத் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ஆர்.கே. பச்சோரி மீது இன்னொரு முன்னாள் பெண் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.
தேரி அமைப்பின் தலைவராக முன்பு இருந்தவர் பச்சோரி. அப்போது இவருக்கு எதிராக பாலியல் புகார் கிளம்பியது. இதையடுத்து அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைவர் பதவியிலிருந்து விலகினார். மேலும், சர்வதேச பருவ நிலை மாற்றம் தொடர்பான குழுவின் தலைவர் பதவியிலிருந்தும் அவர் விலகினார்.

மீண்டும் பதவி
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தேரி அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார் பச்சோரி. இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது புதிதாக உருவாக்கப்பட்ட பதவியாகும்.

புதிய பாலியல் புகார்
இந்தச் சூழ்நிலையில் பச்சோரி மீது புதிய பாலியல் புகார் கிளம்பியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது விடுமுறையில் போய் விட்டார் பச்சோரி. மேலும் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

தேரி ஊழியையின் பாலியல் புகார்
தேரி அமைப்பில் முன்பு பணியாற்றிய பெண் ஊழியை ஒருவர் பச்சோரி செய்த செயல்கள் குறித்து விரிவாக விளக்கி பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் பச்சோரி மீது பரபரப்பு புகார்களை அவர் சுமத்தியுள்ளார்.

தனியாக இருக்கும் சமயத்தில் சில்மிஷம்
இதுகுறித்து அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது... நான் தேரியில் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் பச்சோரி சேட்டையை ஆரம்பித்து விட்டார். எனக்கு அசிங்கமான கெட்ட வார்த்தையால் ஒரு பெயரை சூட்டினார். கேட்டால் செல்லப் பெயர் என்றார்.

இதுதான் உனக்குப் பொருந்தும்
இதுதான் இனி உனது பெயர். இதுதான் உனக்குப் பொருத்தமான பெயர் என்று கூறினார். பூக்கள் எவ்வளவு அழகானது தெரியுமா.. அழகான பூக்களைத் தேடித்தான் வண்டுகள் ஓடி வரும் என்றும் என்னிடம் இரட்டை அர்த்தத்தில் பேசினார்.

எல்லாமே தப்பு
என்னிடம் அவர் பேசிய வார்த்தைகள் எல்லாமே செக்ஸ் ரீதியில்தான் இருந்தன. இரட்டை அர்த்தத்தில்தான் பேசுவார். என்னால் அவருடன் பணியாற்றவே முடியவில்லை.

குண்டாக இருப்பவர்களை தூக்க முடியும்
ஒரு முறை என்னிடம் அவர், என்னால் குண்டாக இருப்பவர்களை ஈஸியாக தூக்க முடியும். எவ்வளவு குண்டாக இருந்தாலும் பரவாயில்லை. நான் ஈஸியாக தூக்கி விடுவேன் என்றார். உன்னைக் கூட என்னால் ஈஸியாக தூக்க முடியும் என்றும் கூறினார்.

ஆண்மை பற்றிப் பேசுவார்
மேலும் தான் உடல் ரீதியாக வலிமையாக இருப்பதாகவும், ஆண்மையுடன் இருப்பதாகவும் அடிக்கடி என்னிடம் கூறி பேசுவார். அவரது பேச்சுக்களின் நோக்கமே என்னுடன் நெருங்க வேண்டும் என்பதுதான்.

வெளியில் சந்திக்க முயற்சித்தார்
அலுவலகம் மட்டுமல்லாமல் என்னை வெளியில் வைத்தும் சந்திக்க பல தடவை முயன்றார். ஆனால் நான் அவரது அழைப்புகளை ஒருபோதும் ஏற்றதில்லை.

மசாஜ் செய்யட்டா?
ஒரு முறை நான் உடல் நலமின்மையால் அலுவலகத்திற்குப் போகவில்லை. உடனே எனது செல்போனுக்குப் போன் செய்து என்ன என்று கேட்டார். நான் தலைவலியாக இருப்பதால் வரவில்லை என்று கூறியபோது நான் நன்றாக மசாஜ் செய்வேன். செய்து விடவா என்று கேட்டார்.

வாய்ப்புகளுக்காக வலை விரித்தார்
அவர் வாய்ப்புகளுக்காக காத்திருந்தார், எனக்கு வலை விரித்தார் என்பதை என்னால் எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. எனது தந்தையின் வயதை ஒத்த நபர் அவர். அவரது செயல்கள் எனக்கு அதிர்ச்சி அளித்தன என்று அவர் கூறியுள்ளார்.
பச்சோரி தனது தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கேட்டது தொடர்பாகவும் அவர் பல பரபரப்பு தகவல்களை இந்த பகிரங்கக் கடிதத்தில் வெளியிட்டுள்ளார். இவரது புகாரால் பச்சோரியின் நிலை மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications