காஷ்மீரில்.. பயங்கரவாதிகளுடன் போராடி உயிரிழந்த இஸ்லாமிய தொழிலாளி! நெஞ்சை உருக்கும் சம்பவம்
ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அப்பாவி மக்கள் கண் எதிரே சுடப்படுவதை பார்த்து அவர்களை காப்பாற்ற சென்ற இஸ்லாமிய தொழிலாளியான சையது அடில் ஹூசைன் ஷா என்பவரும் கொல்லப்பட்டுள்ள சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த நெகிழ்ச்சி சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து கண்மூடித்தனமாக நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த தேசத்தையும் நேற்று மாலை நடைபெற்ற இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் உலுக்கியுள்ளது.

3 பேரையும் தேடும் பணி தீவிரம்
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்று இருக்கிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடங்களும் வெளியிடப்பட்டுள்ளன. தாக்குதலை பார்த்தவர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் வரைபடங்கள் வரையப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
ஆசிப் ஃபௌஜி, சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா ஆகிய மூன்று பேரும் பாகிஸ்தானியர்கள் என்றும் அவர்கள்தான் இந்த தாக்குதல்களை நடத்தி உள்ளனர் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதில், மூசா, யூனுஸ் மற்றும் ஆசிப் என்ற மாற்று குறியீட்டு பெயர்களை கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படை முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
நெகிழ்ச்சி சம்பவம்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தப்ப முடியாது எனறு உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது. ஸ்ரீநகரில் கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன.
அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அரசியல் கட்சிகள், மத அமைப்புகள் என அனைத்தும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாக நேற்று நடைபெற்ற தாக்குதல் அமைந்துள்ளது. பயங்கரவாத தாக்குதலின் போது காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பமும் நடைபெற்றுள்ளது.
காப்பாற்ற முயன்ற இஸ்லாமிய தொழிலாளி
இதற்கிடையே, பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்ற இஸ்லாமிய தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது. பயங்கராவதிகள் தாக்குதல் நடத்திய போது, தன் கண்முன்னே அப்பாவிகள் சுடப்படுவதை கண்ட அப்பகுதியின் குதிரை சவாரி தொழிலாளி சையது அடில் ஹூசைன் என்பவர் சற்றும் தாமதிக்காமல் பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றுள்ளார். அப்பாவி மக்களை காப்பாற்ற நினைத்து கடைசியில் பயங்கராவதிகளின் துப்பாக்கிச்சூட்டில் அவரும் பலியாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications