இவன் தான் அந்த கொடூரன்.. ஜம்மு காஷ்மீர் தாக்குதல் பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியீடு
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 27 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று கொடூர தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர். ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்துக்குள் நேற்று நுழைந்த 4 பயங்கரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு சுற்றுலா பயணிகளை கென்றனர்.

இந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் மொத்தம் 27 பேர் பலியாகினர். தமிழ்நாடு, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் உள்பட மொத்தம் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி மொத்த உலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ்
சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில் தான் தற்போது இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதியின் முதல் போட்டோ வெளியாகி உள்ளது.
அந்த போட்டோ என்பது பயங்கரவாதியின் பின்னால் இருந்து ஒருவர் எடுத்துள்ளார். இதனால் அவரது முகம் தெரியவில்லை. ஆனாலும் அந்த நபர் சிவப்பு நிற ஜிப்பா அணிந்து கையில் துப்பாக்கி வைத்திருப்பது தெளிவாக தெரிகிறது. இந்த கொடூர பயங்கரவாதி உள்பட அவனுடன் சேர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய மேலும் 3 பேர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications