காஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து பாடுபடுமாம் பாகிஸ்தான்.. சொல்கிறார் தூதர் அப்துல் பாசித்
டெல்லி: காஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து பாகிஸ்தானா பாடுபடும், ஆதரவு தரும் என்று இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் கூறியுள்ளஆர்.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், பாகிஸ்தானின் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது பேசுகையில் இவ்வாறு கூறினார் பாசித். இந்தியாவிடமிருந்து காஷ்மீர் விடுதலை பெறும் வரை காஷ்மீருக்கு அரசியல் ரீதியாக, தார்மீக ரீதியாக, தூதரக ரீதியாக ஆதரவு தொடரும் என்றும் பாசித் பேசினார்.

பாசித் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை இந்த சுதந்திர தினத்தை நாங்கள் காஷ்மீர் விடுதலைக்கு அர்ப்பணிக்கிறோம். ஜம்மு காஷ்மீர் மக்கள் செய்த தியாகங்கள் நிச்சயம் வீண் போகாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
தற்போது காஷ்மீரில் நிலவி வரும் சர்ச்சைகள் ஓய வேண்டும். அமைதி திரும்ப வேண்டும். காஷ்மீர் மக்கள் விரைவில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும்.
காஷ்மீர் மக்கள் தங்ளைத் தாங்களே ஆளும் நிலை வர வேண்டும். சுய நிர்ணய உரிமை அவர்களுக்கு கிடைக்க வேண்டும். அதுவரை பாகிஸ்தான் ஆதரவு தரும். ஆயுத பலத்தாலும், அரசியல் அடக்குமுறையாலும் காஷ்மீர் மக்களின் போராட்டத்தை நசுக்க முடியாது, உணர்வுகளைப் பொசுக்க முடியாது. அவர்களது போராட்டம் சட்டரீதியானது என்று பாசித் பேசினார்.












Click it and Unblock the Notifications