குழந்தைக்கு விசா கிடைக்காமல் தவித்த பெண் – பாகிஸ்தான் திரும்பினார்
ஜெய்ப்பூர்: இந்தியாவில் பிறந்த குழந்தைக்கு விசா இன்றி தவித்த மாய் பாத்திமா என்ற பெண் பாகிஸ்தான் திரும்பி சென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் பகுதியில் வாழ்ந்த தனது தந்தை மரணம் அடைந்த செய்தியை அறிந்த பாகிஸ்தானில் வசிக்கும் மாய் பாத்திமா என்ற பெண் தனது தாயை சந்தித்து ஆறுதல் கூற கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி கணவருடன் ராஜஸ்தானுக்கு வந்தார்.
இந்தியாவில் பிரசவம்:
கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 14 ஆம் தேதி ஜெய்சால்மர் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் தார் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பாகிஸ்தானுக்கு செல்ல முயன்ற போது அவர்களின் பாஸ்போர்ட்டில் குழந்தையின் பெயர் குறிப்பிடப்படாததால், இந்திய எல்லையை விட்டு அனுப்ப குடியுரிமை துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
விசாவுக்கு கோரிக்கை:
இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பிறந்ததற்கான அரசு சான்றிதழை பெற்ற மாய் பாத்திமாவின் கணவர் மீர் முகம்மது தங்கள் மகனுக்கு விசா கேட்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் தூதரகத்தை நாடினார்.
ஏக்கத்தில் பாத்திமா:
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கையில் 15 நாள் பச்சிளம் குழந்தையுடன், எப்போது விசா கிடைக்கும் என்ற ஏக்கத்தில் மாய் பாத்திமா கடந்த ஒரு வாரமாக கவலையுடன் தவித்துக் கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் திரும்பினர்:
இந்நிலையில், பிறந்த குழந்தையுடன் அந்த தம்பதியர் இந்தியாவை விட்டு செல்ல பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதி அளித்ததால் நேற்று அவர்கள் ஜோத்பூர் வழியாக பாகிஸ்தானுக்கு புறப்பட்டு சென்றதாக மாய் பாத்திமாவின் தாத்தா ரசூல் கான் தெரிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications