எல்லையில் அத்துமீறும் பாக்- உடன் இந்தியா பேச்சுவார்த்தை... வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடத்த முடிவு
இஸ்லாமாபாத் : எல்லையில் தாக்குதல் நீடித்து வரும் நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23 ஆம் தேதி இந்தியா வருகிறார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கடந்த மாதம் ரஷியாவின் உபா நகரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்த மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் நடத்த இந்தியா விரும்பியது. அதன்படி இந்த பேச்சுவார்த்தைக்கான திட்டங்கள் தயாரிப்பில் இரு நாட்டு அதிகாரிகளும் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அடுத்தடுத்த தாக்குதல்களை அரங்கேற்றினர். மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியபோது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதியும், பாகிஸ்தானை சேர்ந்தவன் என்பது உறுதியானது.
ஆனால் காஷ்மீரில் பிடிபட்ட தீவிரவாதி பாகிஸ்தானை சேர்ந்தவன் அல்ல என்று வழக்கம் போல மறுப்பு தெரிவித்த பாகிஸ்தான், அந்த தாக்குதல் இந்திய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்றும் கூறியது.
இந்த காரணங்களால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் நிலவியது. எனினும் இந்த சந்திப்பை ரத்து செய்வது தொடர்பாக எந்த தகவலையும் இரு நாடுகளும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த சந்திப்பை பாகிஸ்தான் நேற்று உறுதி செய்தது. இது தொடர்பாக பேசிய பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் வரும் 23-ஆம் தேதி, இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், அப்போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசுடன் விவாதித்த பிறகே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அஜீஸ் கூறினார்.
இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான முதலாவது பேச்சுவார்த்தை, இது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications