For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியின் தாயாருக்கு புடவை அனுப்பிய நவாஸ் ஷெரிப்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் தாய்க்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சேலை அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மோடியும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.

Pakistan PM Nawaz Sharif gifts “saree” to Narendra Modi's mother

இந்திய பிரதமராக நரேந்திரமோடி கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றபோது, சார்க் நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கும் அந்த விழாவில் பங்கேற்க அழைப்புவிடுத்தார். நவாஸ் ஷெரிப்பும் விழாவுக்கு வந்து கவுரவித்தார். அப்போது, நவாஸ் ஷெரிப்பின் தாய்க்கு, மோடி ஒரு சால்வையை பரிசாக கொடுத்தனுப்பினார். இதற்காக ஷெரிப்பின் மகள் மர்யம் நவாஸ் ஷெரிப் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடிக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நவாஸ் ஷெரிப், மோடியின் தாய்க்கு சேலையொன்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மோடி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி இன்று செய்துள்ள ட்விட்டில், "நவாஸ் ஷெரிப் ஜி, அருமையான ஒரு வெண்ணிற சேலையை எனது தாய்க்காக அனுப்பி வைத்துள்ளார். இதற்காக நெகிழ்ச்சியடைகிறேன். எனது தாயாருக்கு இந்த சேலையை விரைவில் அனுப்பி வைப்பேன்" என்று கூறியுள்ளார்.

English summary
It seems that India-Pakistan ties are heading in the right and positive direction. The prime ministers of both the countries are gifting each other's mothers with shawl and saree. When Pakistani PM Nawaz Sharif visited India to attend Narendra Modi's swearing -in ceremony last month, then Modi had gifted a shawl to his mother. Now, as a 'return gift', Sharif has send a saree for PM Modi's mother, Heeraba.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X