பாகிஸ்தான் பாடகர் அட்னன் சாமிக்கு இந்திய குடியுரிமை
மும்பை: பாகிஸ்தான் பாடகர் அட்னன் சாமிக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தைக்கும், காஷ்மீரைச் சேர்ந்த தாய்க்கும் லண்டனில் பிறந்தவர் அட்னன் சாமி. பாலிவுட்டில் பிரபல பாடகராக உள்ளார். இங்கிலாந்தில் வளர்ந்த அவர் கனடா பாஸ்போர்ட் வைத்துள்ளார். மேலும் கடந்த மே மாதம் வரை அவர் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

2001ம் ஆண்டு முதல் அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் இந்திய இசைத்துறையில் சேவை செய்து வரும் அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.
அட்னன் கடந்த மே மாதத்துடன் முடிந்த தனது பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவில்லை. இதையடுத்து அவர் காலவரையின்றி இந்தியாவில் தங்க கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தான் அவருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது. அண்மையில் மும்பையில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சி சிவசேனாவின் மிரட்டலால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications